Latest | சமீபத்தியது உள்நாடு 

’நன்கொடைகளை ஏற்க வேண்டாம்’ என அரச பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு அறிவிப்பு…..

“நாட்டில் உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பிரபலமான மற்றும் முன்னணி அரச பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் தேவையற்ற நன்கொடையோ நிதியோ வசூலிக்கக் கூடாது” என்று கல்வி அமைச்சு அனைத்து அரச பாடசாலை நிர்வாகத்திற்கும் சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக லஞ்சம் (சட்டவிரோதமான நன்கொடைகள்) பெற்றதற்காக சுமார் 36 நிர்வாகிகள் கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டனர். இந்த வருடமும் மாணவர்களை உள்வாங்குவதற்கு பெற்றோரிடம் இலஞ்சம் பெற முற்பட்டமை தொடர்பில் இதுவரை கல்வி அமைச்சு மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு 800 எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இருப்பினும், இந்த நோக்கத்திற்காக பெற்றோரிடம் லஞ்சம் கேட்டதற்காக சுமார் மூன்று பாடசாலை அதிபர்கள் இப்போது போலீஸ் காவலில் உள்ளனர். எனவே, பெற்றோர்கள் தேவையற்ற நன்கொடைகளை வழங்க வேண்டாம் என்றும், நிர்வாகத்தின் இத்தகைய முறைகேடுகள்…

Read More
Latest | சமீபத்தியது 

துருக்கியில் இலங்கையின் தங்க மகள்…..

துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் எக்யூப்டு பெஞ்ச் பிரஸ் மற்றும் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் (Classic Equipped Bench Press and Powerlifting Championships) போட்டியில் இலங்கை வீராங்கனை ஷெனுகி திஷாலியா 47 கிலோ எடைப் பிரிவில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனவரியில் மின்சாரத் துண்டிப்பு: கூற்று உண்மைக்கு புறம்பானது

ஜனவரி மாத மத்தியிலிருந்து மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் என தெரிவிக்கப்படும் கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவ்வாறான தகவல்கள் மூலம் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. வருடம் முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க மின்சார சபைக்கு திறன் உண்டு எனவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் குறிப்பிட்டார்.

Read More
Latest | சமீபத்தியது 

கொவிட் தொற்றுக்குள்ளான அக்ரஹார காப்புறுதி பயனாளிகளுக்கு 30,000 ரூபா.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அக்ரஹார தேசிய காப்புறுதி நிதியத்தின் அங்கத்தவர்கள் 22,000 பேருக்கு காப்புறுதி உதவி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 66 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொவிட் தொற்று ஏற்பட்ட அரச சேவையாளர்கள், பகுதியளவில் பாதிக்கப்பட்ட அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரச சேவையாளர்கள் என காப்புறுதி நன்மைகளை பெறுவதற்காக 42 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுள் 22,000 பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன, ஏனையோருக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலை அல்லது அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் மாத்திரம் அக்ரஹார காப்புறுதியை பெற தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது 

Laugfs எரிவாயு சிலிண்டர்களை மீள கையளிக்குமாறு அறிவிப்பு….

டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள கையேற்பதற்கு Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. பச்சை நிற சீல் அகற்றப்பட்டாலும் எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்குவதற்கு விருப்பமான நுகர்வோருக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என Laugfs எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. Laugfs எரிவாயு விற்பனை முகாமையாளர் அல்லது விநியோக பிரதிநிதிகளை சந்தித்து சிலிண்டர்களை கையளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை மீள வழங்கும் போது, அதன் நிறைக்கமைய பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது அதற்கேற்ற புதிய சிலிண்டர்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக Laugfs எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2வது இடத்தில்….

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்படி 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே ஆகும். ஆயுட்காலம், பாடசாலைகளில் உள்ள தரங்களின் எண்ணிக்கை, தனிநபர் வருமானம், கார்பன் உமிழ்வு போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்திச் சுட்டெண் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணின் படி, கொஸ்டாரிகா முதல் இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஆசிய நாடாக இலங்கை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More
உள்நாடு 

பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு…..

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது. 50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More
உள்நாடு 

“காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு”…..

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ‘காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு’ என்ற வேலைத்திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கம்பஹா, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில், பல வருடங்கள் பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பத்திரம் கிடைக்கப்பெறாதவர்களுக்கு நேற்றுமுன்தினமும் (27) நேற்றும் (28) காணி உறுதிப்பத்திரங்களை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. காலி மாவட்டத்தில் 300 பேருக்கும், புத்தளம் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 500 பேருக்கும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் நிலந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார். காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வீட்டு வாசலுக்கே காணி உறுதிப்பத்திரம்’ திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 3000க்கும் மேற்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல வருடங்களாக பணம் செலுத்தியும் இதுவரையிலும் காணி உறுதிப்பதிரங்கள் கிடைக்கப்பெறாதவர்களுக்கு, உறுதிப்பத்திரங்களை வழங்கும் நோக்குடன், இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன், இந்த ஆண்டு (2021)…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டம்….

நடத்துனர்கள் இன்றி பேருந்துகளை இயக்கும் புதிய வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் நாளை (30) காலை ஆரம்பிக்கப்படவுள்ளது. தானியங்கி கட்டண முறையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது 

மத்திய வங்கியின் ஆளுநரின் விஷேட அறிவிப்பு….

முன்னர் அறிவித்ததை போன்று இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலரை அண்மித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றினூடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த ஒதுக்கத்தை 2021 ஆம் ஆண்டின் நிறைவு வரை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More