அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில்…

அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில்அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகள் 20 சதவீதக் கழிவுடன் சதோச விற்பனை நிலையங்களில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு தரமான பொருட்களை சாதாரண விலையில் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். சந்தையில் உள்ள விலையைக் காட்டிலும் பொருட்களை விற்பனை செய்வதற்கு அரச மற்றும் தனியார் தொழில் முயற்சியாளர்கள் பலர் முன்வந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More

நாட்டின் அதிக நீர் கொள்ளளவுடைய மூன்றாவது பாரிய நீர்விநியோகத்திட்டம் இன்று ஆரம்பம்…

அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நீர்விநியோகப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் மல்வத்து ஓயா நீர்த்திட்ட அமைப்புப் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது. நீண்ட காலமாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும். அனுராதபுரம் தந்திரிமலையில் இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

“ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

“ஹரித” தொலைக்காட்சி அலைவரிசையின் முதலாவது சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (31) முற்பகல் கொழும்பு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் ஆரம்பமானது. விவசாய துறையினால் போஷிக்கப்பட்ட இந்நாட்டின் கடந்தகால சுபீட்சத்தை மீண்டும் ஏற்படுத்தும் நோக்குடன் சமய பின்புலத்துடன் சிறந்ததோர் விவசாய பொருளாதாரத்திற்கு வழிகாட்டுவது இந்த அலைவரிசையின் பிரதான நோக்கமாகும். விவசாய கைத்தொழிலின் மூலம் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல், புதிய விவசாய தொழிநுட்ப முறைமைகள், பண்டைய காலத்தில் இருந்துவந்த  உயர் விவசாய தொழிநுட்ப முறைமைகளை மீண்டும் ஏற்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு, நீர்ப்பாசன மற்றும் கடற்றொழில் உள்ளிட்ட அனைத்து துறைகள் தொடர்பாகவும் மக்களை அறிவூட்டுவது “ஹரித” தொலைக்காட்சியின் அடிப்படை எண்ணக்கருவாகும். இந்த “ஹரித” தொலைக்காட்சி அலைவரிசை கங்காராம விகாரையுடன் இணைந்த ஸ்ரீ ஜினரத்ன கல்வி பரிபாலன சபையினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி…

Read More

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு…

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்கள் 1,500 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை தயாராகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த வர்த்தகர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பல பிரதேசங்களில் உள்ள வர்த்தகர்கள் அரிசியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விலைப் பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, அரிசியைப் பதுக்கியமை உள்ளிட்ட குற்றங்களுக்கு உட்பட்டுள்ளனர். இவ்வாறு தவறிழைப்போரை கைது செய்யுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read More

பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்…

கணினி தரவு அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் (Data Scince, Software Engineering) தொடர்பான புதிய தொழில் வாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 2025 ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி அஜித் ஜீ மதுரபெரும தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற விசேட ஊகவியலாளர் மகாநாட்டில் துணை வேந்தர் இதனை தெரிவித்தார். இந்த மகாநாட்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் ரணதுங்கவும் கலந்து கொண்டார். தற்போதைய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏற்றவாறு கற்கை நெறி திருத்தப்பட்டுள்ளது. இதனை இணைய வழி தொழில்நுட்பத்தின் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதியுடன்…

Read More

சீனாவின் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு…

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி தொகையை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். பீஜிங்கில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 869 என்ற விமானத்தின் ஊடாக குறித்த 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று (31) முற்பகல் 11.28 மணிக்கு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. குறித்த தடுப்பூசிகளை ஜனாதிபதி இன்று உத்தியோகபூர்வமாக பெற்றுக் கொண்டுள்ளார்.

Read More

சுற்றாடலை பாதுகாக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்…

நாட்டில் இடம்பெறும் வன அழிப்பு உள்ளிட்ட சுற்றாடல் பாதிப்பு தொடர்பாக உடனடியாக செயல்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைவாக பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுற்றாடலை பாதுகாக்கும் புதிய நடவடிக்கைகள் பலவற்றை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்த்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More

மோட்டார் சைக்கிள்களை பரிசோதனை செய்யும் விசேட நடவடிக்கை இன்று ஆரம்பம்…

மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோர்களினால் இடம்பெறும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இன்று தொடக்கம் 4 நாட்களுக்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களில் பெரும்பாலானவை மோட்டர் சைக்கிளாளேயே இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், நேற்றைய தினம் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்கில் நடை பாதையில் சென்ற இருவரும், மோட்டர் வாகனங்களை செலுத்திய மூவரும், வாகனங்களில் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர். வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வது இந்த மோட்டர் சைக்கிள் பரிசோதனையாகும். மோட்டார் சைக்கிள்களில் சொல்வோரை சிரமத்துக்குள்ளாக்குவது இதன் நோக்கமல்ல. வீதி பாதுகாப்பே முக்கியமாகும். நாளாந்தம் விபத்துக்களினால் 3 தொடக்கம் 5 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்புக்களை தடுப்பதே எமது நோக்கமாகும் என்று அவர்…

Read More
Entertainment | பொழுதுபோக்கு, 

பூஜையுடன் தொடங்கிய தளபதி65

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் தளபதி விஜய் நெல்சல் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். இந் நிலையில் இன்றைய தினம் தளபதி 65 படத்திற்கான பூஜை இன்றைய சன் பிக்ஷர் ஸ்ரூடியோவில் படத்திற்கான பூஜை போடப்பட்டது. இதில் விஜய் நெல்சன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.அதேவேளை படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இசை அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Read More

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு வர்த்தமானி வெளியீடு.

தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் 1000 ரூபாவாக வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை போன்று தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More