சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு!
சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரண்டு மாடிகளை கொண்டுள்ளது. புதிய கட்டடத் தொகுதியை திறந்துவைக்கும் வகையில் நினைவு பலகையை திறந்துவைத்த கௌரவ பிரதமர், அதனை தொடர்ந்து இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலும் கலந்து கொண்டார். அங்கு அனுசாசனம் நிகழ்த்திய பௌத்தாலோக மாவத்தை அதுல தஸ்ஸன விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதி சிறி தம்மவங்ச மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய பொரள்ளே அதுல நாயக்க தேரர் கௌரவ பிரதமரினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தைரியமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்தார். கௌரவ…
Read More