Latest | சமீபத்தியது 

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில்காலை வேளையில் பனிமூட்டமான நிலைஎதிர்பார்க்கப்படுகின்றது.காற்று :நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையானகடற்பரப்புகளில் காற்றானதுமேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனையகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்துவீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோ மீற்றர் வரைகாணப்படும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகமட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்துமன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.கடல் நிலை:கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான

Read More
Latest | சமீபத்தியது 

நாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

பண்டிகை நாட்களை முன்னிட்டு இக் காலப் பகுதியில் பொதுஇடங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகபொலிஸார் கூறியுள்ளனர்.அதன்படி தங்க நகைகள் கொள்ளை, பணப்பைகள் திருட்டு,மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருட்டு போன்றசம்பவங்கள் இக் காலக்கட்டத்தில் அதிகரித்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித்ரோஹன தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் சாரதிகளின் குற்றங்களைகுறைக்க போலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்டகண்காணிப்பு நடவடிக்கையில் 13,320 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Read More
Latest | சமீபத்தியது 

90 ஆயிரம் பேர் பூரண குணம்!…

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று (01) மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,021 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,128 ஆக அதிகரித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை…

நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை… புனித வாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அந்த காலகட்டத்தில் விழிப்புடன் இருக்கவும், நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும்பாதுகாப்புப் படைத் தலைவருக்கு மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் இன்னும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், இலங்கை பொலிஸாருடன் இணைந்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு முப்படைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதம், வன்முறை அல்லது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் இருந்தால் உடனடியாக சட்டத்தை அமல்படுத்தவும் தேவாலயத்தால் நியமிக்கப்பட்ட தேடல் குழுக்கள் உட்பட வழிபாட்டாளர்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களில் பலியானவர்களை…

Read More
Politics | அரசியல் Uncategorized 

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு…

எதிர்வரும் தேர்தலில் கடமைகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் செயலமர்வு இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 2019ம் ஆண்டுக்காக வழங்க வேண்டிய கணக்காய்வு அறிக்கைகளை இதுவரை வழங்காத 4 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவித்திருக்கிறது. எதிர்வரும் 22ம் திகதிக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் உரிய கட்சிகளின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்படும்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உத்தியோகபூர்வ பெயர் மத, இன அடிப்படையில் அமைந்துள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படவிருக்கிறது. இது பற்றி விசாரணைகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையாளர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More