Latest | சமீபத்தியது 

கொரோனா தொற்றுக்கு பின்னர் நாடுகள் பொருளாதார ரீதியில் வளர்சியடைய பெரும் முயற்சி….

கொவிட் – 19 தொற்றுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தமது பொருளாதார வளர்ச்சி வேகத்தை மேம்படுத்துவதற்காக நாடுகள் முயற்சிப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் 6.9 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அமையும். இருப்பினும், பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் அந்தந்த நாடுகளின் நிதி நிலைமை தொடர்பாக வளர்ச்சி வேகம் மாற்றமடைய கூடும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கொரோனா வைரஸ் தொற்று காலப்பகுதியில் உலக பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம்பெறும். ஜெர்மன் பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் குறைவான பொருளாதார வளர்சியை காணக்கூடியதாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

இணையம் ஊடாக விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் கைது.

நேற்றைய தினம் இணையத்தளத்தினுாடாக விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம் பெண்ணொருவரை முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் வாத்துவ காவல் துறையினரால் பாணந்துறை ,வலான பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட கண்டி பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடை பெண் ஆகும். நேற்றைய தினம் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Read More
Entertainment | பொழுதுபோக்கு, 

மாஸ்டர் பட நடிகைக்கு கொரானா!

தளர்வுகளுடன் சினிமாத்துறையில் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது .இந்தியாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து சினிமா நட்சத்திரங்களுக்கு தொற்று பாதித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவரை தொடர்ந்து தற்போது மாஸ்டர், 96 பட நடிகை கெளரி கிஷனுக்கும் கொரானா தொற்று இருப்பதாக உறுதியாகி உள்ளது. இதனை அவரது சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது Uncategorized 

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்…

அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு காணிக்கையாகசெலுத்தும் வருடாந்த புத்தரிசி விழா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்தலைமையில் இன்று (04) முற்பகல் அனுராதபுரம் வரலாற்று முக்கியத்துவமிக்க ஜய ஸ்ரீமகாபோதி வளாகத்தில் இடம்பெற்றது.விவசாயிகள் தாம் பெற்றுக்கொண்ட அறுவடையின் முதற் பகுதியை காணிக்கையாகவழங்குவது பாரம்பரியமாக இடம்பெற்றுவரும் வருடாந்த சம்பிரதாயமாகும். 54வதுதடவையாக இடம்பெற்ற தேசிய புத்தரிசி விழா அட்டமஸ்தானாதிபதி கலாநிதி சங்கைக்குரியபல்லேகம ஸ்ரீநிவாச நாயக்க தேரரின் ஆலோசனையின் பேரில் விவசாயத்துறை அமைச்சும்கமநல சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.உரிய பருவ காலத்தில் மழை கிடைக்கப்பெற்று தமது பயிர் நிலங்கள் செழிப்புற்று விளங்கஇயற்கையின் பலமும் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நாலாதிசைகளிலும் இருந்து வருகை தந்திருந்த விவசாய சமூகத்தினர் புத்தரிசி விழாசம்பிரதாயங்களில் பங்குபற்றினர்.பாரம்பரிய சம்பிரதாயங்களின்படி புத்தரிசி விழா ஊர்வலமானது மங்கள வாத்தியங்களுடன்கிழக்கு வாசலின் ஊடாக ஜய ஸ்ரீ…

Read More
Latest | சமீபத்தியது 

சீன தடுப்பூசிகளை இன்று முதல் வழங்க நடவடிக்கை…

சீனாவிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கோவிட் தடுப்பூசிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் இவை முதலில் இந்நாட்டிலுள்ள சீன பிரஜைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 லட்சம் தடுப்பூசிகள் கடந்த 31 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தது. ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் இதனை இலங்கைக்கு வழங்கியிருந்தார்.

Read More
Latest | சமீபத்தியது 

இலங்கை அபிவிருத்தி முறிகள், வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள் பற்றிய தவறான செய்தி அறிக்கை…

உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் தொடர்பிலான கடன் நிலுவைகளின் தீர்ப்பனவு திட்டமிடப்பட்டு தாமதப்படுத்தப்படுகின்றது என நேற்று குறித்த நாளிதழொன்று தவறான அத்துடன் அடிப்படையற்ற செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி ஏமாற்றத்துடன் அவதானம் செலுத்துகின்றது. உள்நாட்டு வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள், அதேபோன்ற அரசாங்கத்தின் ஏனைய படுகடன் கடப்பாடுகள் தொடர்பிலான படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள், வட்டி மற்றும் முலதனக் கொடுப்பனவுகள் உரிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுவருகின்றன என்பதனை மத்திய வங்கி முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியப்படுத்துகின்றது. குறிப்பிடப்பட்ட நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டவாறு அத்தகைய கொடுப்பனவுகளை தாமதப்படுத்துவதற்கு அல்லது பிற்போடுவதற்கு எவ்வித திட்டமும் கிடையாது என்பதுடன் அதற்கமைய, செய்திக் குறிப்பில் அறிக்கையிடப்பட்ட விடயங்கள் முழுமையாக தவறானதும் அடிப்படையற்றதுமாகும். முதிர்வுறுகின்ற படுகடன் கடப்பாடுகளை தீர்ப்பனவுசெய்வதனை தாமதப்படுத்துவதன்…

Read More
Latest | சமீபத்தியது 

சம்பா அரிசியை 89 ரூபாவுக்கு வழங்க தனியார் வர்த்தகர்கள் உடன்பாடு…

சம்பா அரிசியை 89 ருபாவுக்கும், நாட்டரிசியை 90 ருபாவுக்கும் சதொச நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தனியார் துறையினருடன் விவசாய அமைச்சு போட்டி தன்மை நிலையை ஏற்படுத்தியதன் ஊடாக தற்பொழுது அரிசி விலை வீழ்சசியடைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அனுராதபுரம் ஜெயஸ்ரீ மாபோதியில் நேற்று (04) நடைபெற்ற தேசிய புத்தரிசி நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். விவசாயிகளின் உற்பத்திக்கு கூடுதலான விலையை வழங்குவது போன்று, குறைந்த விலையில் அரிசியை நுகர்வோருக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி எம்மிடம் வலியுறுத்தினார். சவால் மிக்க இந்த திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் நாட்டில் உள்ள 500 சதொச கிளை வலைப்பின்னல் ஊடாகவும், 2,500 கூட்டுறவு…

Read More