சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி ,இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 31-1ஆம் பிரிவின் நியதிகளுக்கு அமைய நேற்று முதல் அமுலாகும் வகையில் சுவர்ணமஹால் நிதி நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.