Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

5000 ரூபா நிவாரண கொடுப்பனவு – இன்று முதல் மீண்டும்…

புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவேறுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (15) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் புத்தாண்டை முன்னிட்டு இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த நிவாரணத்தை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு இன்று முதல் மீண்டும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் 18 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More
Uncategorized 

மரக்கன்று நடும் சுபநேரத்தில் நடுவதற்காக கௌரவ பிரதமரினால் சுற்றாடல் அமைச்சருக்கு வெண்சந்தனக் கன்று வழங்கி வைப்பு!

மரக்கன்று நடும் சுபநேரமான நாளைய தினத்தில் (16) நடுவதற்காக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், சுற்றாடல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களுக்கு வெண்சந்தனக் கன்றொன்று வழங்கிவைக்கும் நிகழ்வு கால்டன் இல்லத்தில் இன்று (15) நடைபெற்றது. தமிழ் சிங்கள புத்தாண்டு சடங்கின் மரக்கன்று நடும் புண்ணிய நிகழ்வு நாளை (16) காலை 6.40 மணிக்கு கிழக்கு நோக்கி இடம்பெறவுள்ளது. இச்சடங்கின் பிரதான நிகழ்வு அகுணுகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள சுற்றாடல்துறை அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.இதற்கமைவாக மரக்கன்று நடும் சடங்கு நாடளாவிய ரீதியிலும் இடம்பெறவுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி…

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் 30 பேருக்கு மட்டுமே அனுமதிதனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்கிலாந்து அரச நிர்வாக பொறுப்பை இங்கிலாந்து ராணி எலிசபெத் ஏற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரும், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை மறுநாள் வின்ஸ்டர் கேஸ்டிலில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதால், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் ராணி, அவரது உறவினர்கள் உள்பட மொத்தம் 30 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இதன் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘இறுதிச் சடங்கில் பங்கேற்க வரும் பேரன்கள் இளவரசர் வில்லியம்ஸ், ஹாரிஸ்சுக்கு முதல் மற்றும் 5ம் நாளில் 2 கட்ட…

Read More
Latest | சமீபத்தியது 

ஹல்முதல்லவில் விபத்து

ஹல்தமுல்ல களுப்பான பகுதியில் ஆட்டோவொன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த ஆணொருவர் சம்பவம் இடத்திலேயே பலியானார். அத்துடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

Read More