Latest | சமீபத்தியது 

Oxford Astra Zeneca தடுப்பூசி 2 ஆவது சொட்டு – மே மாதம் 1 ஆம் திகதி ஆரம்பம்…

Oxford Astra Zeneca தடுப்பூசி 2 ஆவது சொட்டு வழங்கும் பணி மே மாதம் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர், விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துநில் இன்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். கொவிட் வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக வழங்கப்படும் 2 ஆவது சொட்டு மருந்து என்ற ரீதியில் சீனா பாம் தடுப்பூசியை வழங்குவது தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். முதலாவது தடுப்பூசி என்ற ரீதியில் Oxford Astra Zeneca தடுப்பூசி வழங்கப்பட்டிருக்குமாயின், 2 ஆவது தடுப்பூசி சொட்டு மருந்தாக Oxford Astra Zeneca தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று தற்பொழுது…

Read More
Latest | சமீபத்தியது 

விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது…

பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More