Latest | சமீபத்தியது 

எதிர்வரும் இரு வாரங்கள் அனைத்து அரச தனியார் விழாக்களையும் நிறுத்த அரசாங்கம் தீர்மானம்….

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த தனியார்துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை கொரோனா மருத்துவமனையாக மாற்ற திட்டம்..!

யாழ் குடா நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையுமானால் மேலும் ஒரு வைத்தியசாலை அவசியம் என்ற அடிப்படையில் யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை தற்காலிக வைத்தியசாலையாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரியை தேவை ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தற்காலிக கொரோனா மருத்துவமனையாக மாற்றியமைக்க முன் ஏற்பாடுகள் மேற்கொள்வதெனவும், உடனடியாக வசதிகளை வழங்ககூடியவாறான ஒழுங்குகளை செய்யவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.

Read More
Latest | சமீபத்தியது 

கோவில்களில் திருமணத்தை நடத்த முடியாமல் திணறல் – கோவில் முன்பே தாலி கட்டிய ஜோடி..!

ஊரடங்கு காலத்திலும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று 12 ஜோடிக்கு திருமணம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வது மணமக்கள் வாழ்கையை மிகவும் இனிமையாக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மிகவும் வசதிபடைத்தவர்களும் கோவிலில் திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளை திருமண மண்டபத்தில் நடத்துவார்கள்.சில சுபமுகூர்த்த நாட்களில் 100 திருமணங்கள் வரை நடைபெறும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பது பற்றி அறியாமல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருமணத்தை நடத்துவதற்கு சில மாதங்களுக்கு முன்பே 12 குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்றே திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட சில திருமண கோஷ்டியினர் இன்று காலை 6 மணி முதல் 7.30 மணிவரையிலான உள்பட 3 முகூர்த்த நேரத்தில், திருமணத்தை நடத்துவதற்காக கோவில் முன்பு திரண்டனர்.…

Read More
Latest | சமீபத்தியது 

வவுனியாவில் கோர விபத்து : சிறுமி பலி – இருவர் படுகாயம்..!

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பகுதியில் இன்று (25) காலை 9.00 மணியளவில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஈரட்டைபெரியகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வவுனியா நகரிலிருந்து ஈரட்டைபெரியகுளம் ஊடாக பயணித்த முச்சக்கரவண்டியும் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது, இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 10 வயதுடைய சிறுமியே இவ்வாறு பலியாகியுள்ளார். சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக மேலதிக விசாணைகளை ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது 

நாடு ஓரே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விடாது பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்.

நாடு ஓரே இடத்தில் ஸ்தம்பித்து நின்று விடாது பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என மகாசங்கத்தினர் தெரிவித்தனர். பௌத்த ஆலோசனை சபை கூட்டம் இன்று (23) பிற்பகல் 10வது தடவையாக ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியபோது கொழும்பு துறைமுக நகர்த் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதன் பின்னர் தேரர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இத்திட்டம் தொடர்பாக விரிவாக தெளிவுபடுத்தியதுடன் பொருளாதாரத்திற்கும் நாட்டுக்கும் கிடைக்கும் பயன்கள் பற்றியும் கருத்து தெரிவித்தார். நில அளவினை விரிவுபடுத்தி புதிய முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துதல் ஒரு நாடு என்ற வகையில் பெற்றுக்கொள்ளும் பாரிய வெற்றியாகும். தவறான கருத்துக்களை பரப்பி அனைத்தையும் எதிர்ப்பதற்கு பதிலாக ஒரு தேசமாக முன்னேறுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ் அபிவிருத்தித்திட்டம் தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவை வழங்கி, அதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேரர்கள் சுட்டிக்காட்டினர்.…

Read More
Latest | சமீபத்தியது 

கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு தீர்வு தடுப்பூசி : அரசாங்கம் அதற்குத் தயார்…

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு. – ஜனாதிபதி தெரிவிப்பு…. கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்துள்ள அனைத்து சட்டதிட்டங்கள், வழிகாட்டல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். உலக சுகாதார தாபனம் தற்போது அங்கீகரித்துள்ள மற்றும் எதிர்காலத்தில் அங்கீகாரம் வழங்க உள்ள கொவிட் ஒழிப்பு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் கொண்டுவரப்பட்ட அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி 925,242 பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியின் இரண்டாவது கட்டம் மே மாதம் முதலாம் வாரத்தில் வழங்கப்படவுள்ளது. முன்னணி சுகாதார…

Read More