அனைத்து பாடசாலைகளும் 30 ஆம் திகதிவரை மூடப்படும் – அரசு அறிவிப்பு
பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காகவே இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தையும், சுகாதார நடைமுறைகளையும் முழுமையாக பின்பற்றுமாறு அனைத்து தரப்பினரிடமும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.