Uncategorized 

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி கௌரவ பிரதமரினால் திறந்து வைப்பு!

சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டடத் தொகுதி கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது. ரூபாய் 1480 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடத் தொகுதி கேட்போர் கூடம், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளடங்களாக பன்னிரண்டு மாடிகளை கொண்டுள்ளது. புதிய கட்டடத் தொகுதியை திறந்துவைக்கும் வகையில் நினைவு பலகையை திறந்துவைத்த கௌரவ பிரதமர், அதனை தொடர்ந்து இடம்பெற்ற பிரித் பாராயண நிகழ்விலும் கலந்து கொண்டார். அங்கு அனுசாசனம் நிகழ்த்திய பௌத்தாலோக மாவத்தை அதுல தஸ்ஸன விகாரை உள்ளிட்ட விகாரைகளின் விகாராதிபதி சிறி தம்மவங்ச மஹா நிகாயவின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய பொரள்ளே அதுல நாயக்க தேரர் கௌரவ பிரதமரினால் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆற்றலும் தைரியமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்தார். கௌரவ…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஜனாதிபதி அலுவலக சேவைகள் தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக…

உருவாகியுள்ள கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் நாளாந்த அலுவலக ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்த போதும் ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருவதன் சிரமத்தை கருத்திற்கொண்டு தொலைபேசி, தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க மற்றும் நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02 வார காலப்பகுதியில், ஜனாதிபதி அலுவலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்பூட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுடன் பின்வரும் தொலைபேசி / தொலைநகல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு –        தொலைபேசி – 0114354550/0112354550 தொலைநகல் – 0112348855 மின்னஞ்சல் –   publicaffairs@presidentsoffice.lk ஒம்புட்ஸ்மன் அலுவலகம் – தொலைபேசி – 0112338073…

Read More
Latest | சமீபத்தியது 

மத்திய வங்கியின் 2020 வருடாந்த அறிக்கை கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு!

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் திரு.டப்ளிவ்.டீ.லக்ஷ்மன் அவர்களினால் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. நாணய விதிச் சட்டத்திற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக நிதி அமைச்சருக்கு வழங்கி வைக்கப்பட வேண்டும். அதற்கமைய மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதியமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று வழங்கி வைக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் அரச கொள்கை கட்டமைப்பிற்குள் இலங்கை பொருளாதாரத்தின் போக்கு குறித்த கணிப்பும் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத், பிரதமர் அலுவலக…

Read More
Latest | சமீபத்தியது 

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலிஅத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன. தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

கண்டி, நாவலப்பிட்டிய, வெலிமடையில் கொரோனா மரணங்கள் பதிவாகின!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். ஐந்து பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது. பொரலஸ்கமுவ, கண்டி, நாலவப்பிட்டிய, வெலிமடை, வத்தளை மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே உயிரிழந்தவர்களாவர். அவர்கள் விபரம் வருமாறு,

Read More
Latest | சமீபத்தியது 

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? ஞாயிறன்று இறுதி முடிவு

நாட்டிலுள்ள பாடசாலைகளை மீள எப்போது திறப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02.04.2021) உறுதியான முடிவெடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மாணவர்களுக்கு தங்குதடையின்றி கல்வி வழங்கப்படவேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். அதேபோல மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கப்படும். அந்தவகையில்தான் 30 ஆம் திகதிவரை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவனாக்களில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமை நாளாந்தம் மீளாய்வு செய்யப்படுகின்றது. நாட்டில் மாகாண கல்விப்பணிப்பாளர்கள் 9 பேர் இருக்கின்றனர். 100 வலய கல்விப்பணிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்களிடமும் கருத்துகள் பெறப்படுகின்றன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட சுகாதார தரப்பினரிடமும் ஆலோசனைகள் பெறப்படும்.…

Read More
Latest | சமீபத்தியது 

கொரோனா தாண்டவம் – நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன்படி மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் பன்னல பொலிஸ் பிரிவு மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் என்பன உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது …

இரசாயன உரங்களின் பயன்பாட்டை முற்றிலுமாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றுவேன் … பேச்சுடன் மட்டுப்பட்டிருக்காமல், செயற்படுவோம் … சேதன உர உற்பத்தி மாவட்ட மட்டத்தில் ஊக்குவிக்கப்படும் …                                                                   ஜனாதிபதி தெரிவிப்பு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இரசாயன உரங்களின் பயன்பாட்டிலிருந்து நீங்கிய எந்த நாடும் உலகில் இல்லாதிருப்பது இலக்கை அடைவதற்கு ஒரு தடையல்ல. பேசிப் பேசி இருக்காது விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார். இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் பயன்பாடு மற்றும் இறக்குமதி மீதான தடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (29)…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார்.கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார்.தனது 27 வருட ஊடக வாழ்க்கையில், பிரபல அறிவிப்பாளராக சிறந்து விளங்கிய அவர், ஒரு முன்னணி இலத்திரனியல் ஊடக அலைவரிசையில் நிகழ்ச்சி முகாமையாளராகவும், பணிப்பாளராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் மற்றும் அலைவரிசையின் தலைவர் உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.இலங்கை வானொலியில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்பத்திய திரு. கிங்ஸ்லி ரத்நாயக்க, தனது படைப்புத் திறமைகள் மூலம் ஊடகத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவராவார்.

Read More