Latest | சமீபத்தியது 

எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் கற்பாறை சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் மலல்பொல பிரதேசத்தில் பாரிய கற்பாறையொன்று இன்று சரிந்து விழுந்தது. இதனால் சிலமணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாதையில் விழுந்த கற்கல் உடைக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட பாதையில் பயணிப்போர் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

ஸ்டொக்கம் தோட்டத்தில் லயன் சுவர் இடிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம் – 12 பேர் பாதிப்பு!

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13 ஆம் இலக்க நெடுங்குடியிருப்புமீது சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. R

Read More
Uncategorized 

இராணிவத்தை தோட்டத்தில் முறிந்து விழுந்தது பாரிய மரம் – தாயும், மகளும் காயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு சேதமடைந்துள்ளது. அத்துடன், வீட்டிக்குள் இருந்த தாயும் (வயது 38) , மகளும் (வயது 06) காயமடைந்துள்ளனர். இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வீட்டிற்கு பின்புறத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீட்டின் சமையலறை பகுதியில் விழுந்துள்ளது. அவ்வேளையில் சமையலறையில் இருந்த 38 வயதுடைய தாயும், 6 வயதுடைய மகளும் காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Read More
Latest | சமீபத்தியது 

கொழும்பு , கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிக்கத்தடை!

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது. அதேவேளை,…

Read More
Latest | சமீபத்தியது 

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். ஆரோக்கியமான உற்பத்தித்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு மாற்றுவது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும். எதிர்கால தலைமுறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதற்காக சேதன பசளை உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பசளைகளின் அளவு குறித்து திருப்தியடையாத பட்சத்தில்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகள்,
இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு…

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். அந்த வகையில் சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சில மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869 விமானம் இன்று (26) அதிகாலை 12.05க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஹொன் (Qi Zhen Hon) அவர்களினால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த இரண்டாவது தடுப்பூசிகள் தொகுதி இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்வதற்காக கோரியுள்ள…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

“எம்வீ எக்ஸ் – பிரஸ் பர்ள்” (MV X- Press Pearl) கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடல் முறைமைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதியின் பணிப்புரையில் பல நடவடிக்கைகள்…

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான எம்வீ எக்ஸ் – பிரஸ் பர்ள் கப்பலின் மூலம் சமுத்திர சுற்றாடலுக்கும் கடற்கரைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வழங்கிய பணிப்புரையின் பேரில் சமுத்திர சுற்றாடல் அதிகாரசபை, பாதுகாப்புத்துறை மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய ஏனைய அரச நிறுவனங்கள் இணைந்து விரிவான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பலை சூழவுள்ள கடற்பகுதியில் எண்ணெய் பரவக்கூடிய நிலை ஏற்பட்டால் தற்போதைய காலநிலைக்கு முகங்கொடுத்து அதனை குறைப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். இத்தகைய அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கு உலகின் வேறு நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கடற்கரைகளில் கரை ஒதுங்கியுள்ள பொருட்களை அகற்றும் நடவடிக்கைகள் கடற்படை மற்றும் ஏனைய துறைகள் இணைந்து தற்போது…

Read More
Latest | சமீபத்தியது 

புதிய சட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்…

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி திரு.சஞ்சய ராஜரத்னம் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். திரு.சஞ்சய ராஜரத்னம் நாட்டின் 48வது சட்ட மா அதிபராவார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள திரு.ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். கொழும்பு புனித பீட்டர் கல்லூரி, ரோயல் கல்லூரிகளில் கல்விகற்றுள்ள அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். திரு.ராஜரத்னம் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார். அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை…

Read More
Uncategorized 

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸில் பிறந்த குழந்தை..!

கொழும்பில் சுவசெரிய அம்பியுலன்ஸிற்குள் குழந்தை பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.பிரசவிக்கப்பட்ட குழந்தையும் தாயும் களுபோவில வைத்தியசாலையில் மிகவும் ஆரோக்கியமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் களுபோவில வைத்தியசாலை தாதி ஒருவர் பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். ” இன்று (நேற்று) காலை 1990 சுவசெரிய சேவையில் பயணியாற்றும் ரவிந்து அம்பியுலன்ஸிற்கு வெளியே வரும் போது கையில் குழந்தையுடன் வந்தார். குழந்தை குறித்து அவரிடம் வினவிய போது, “மிஸ் நாங்கள் தற்போது இந்த குழந்தையை பிரசவித்தோம்.பிரசவித்த குழந்தையே இது. குழந்தையின் தாய் உள்ளே உள்ளார். எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தனக்கு பிரச வலி வந்துவிட்டதாக பெண் ஒருவர் கூறினார். உடனடியாக சென்று பார்க்கும் போது குழந்தை பிரசவிக்கும் நிலையில் இருந்தார். அம்பிபுலன்ஸில் ஏறியதும் குழந்தை பிறந்துவிட்டது. நான் தான் குழந்தையை வெளியே…

Read More
Latest | சமீபத்தியது 

கடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான_செய்தி

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான நிவாரணத்தை ஆகஸ்ட் மாதம் இறுதி வரை நீடிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. சகல அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு இது தொடர்பான அறிவித்தலை இலங்கை மத்திய வங்கி திங்கட்கிழமை (25) வெளியிட்டிருந்தது. மே 15 வரை செயலிலுள்ள, செயலில் இல்லாத சகல கடன் வசதிகளுக்கும் ஆகஸ்ட் 31 வரை மீளச் செலுத்தும் நிவாரண காலம்.இவ்வாறான நிவாரண காலப்பகுதிக்கு அறவிடப்படும் வருட வட்டி 6.18%.இந்தச் சலுகையினூடாக ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை நிலுவைக் காலம் நீடிக்கப்படும் வசதிகளில் தொழிற்படு மூலதனம், அடகு, தற்காலிக மேலதிகப் பற்றுகள், குறுங்கால நிதி வசதிகள் போன்றனவும் அடக்கம்.மே 15 முதல் ஆகஸ்ட் 31 வரையான நிவாரண காலப்பகுதிக்கு தண்ட வட்டி அறவீடு…

Read More