Politics | அரசியல் 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் கிராமத்தில் சந்தைப்படுத்த முடியாத நிலையில் 75 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட வட்டக்காய்கள் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமைகள் காரணமாக இவ்வாறு சந்தைப்படுத்த முடியாது இருப்பதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்திற்கு முகம் கொடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். கண்ணகிபுரம் கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயமாக காணப்படுகிறது. இந்தநிலையில் 75 ஆயிரம் கிலோவுக்கு மேற்பட்ட வட்டக்காய்களை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை அவர்களை பெரிதும் பாதித்துள்ளது. எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.www.kuruvi.lk

Read More

COVID-19 ஒழிப்பு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று வழிகாட்டல் ஒழுங்கு விதிகள் வௌியிடப்பட்டுள்ளன.

2021 மே மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மே 20 ஆம் திகதிக்கு பின்னர் COVID-19 நிலைமையை கருத்திற்கொண்டு அறிவித்தல் விடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், கலையரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகங்கள், களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள், Casino, இரவுநேர களியாட்ட விடுதிகள், மசாஜ் நிலையங்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாடுகள், கூட்டங்கள், செயலமர்வுகள் என்பனவற்றை நடத்த எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அங்காடிகள், பாரிய வர்த்தக அங்காடிகள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் 25 வீத பணியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், தங்குமிடங்கள் மற்றும் வாடி…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்…

அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வகையில், ஜனாதிபதி அவர்கள் இன்று (01) முற்பகல் மிரிஹானவில் உள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் ஒரு மஞ்சள் கன்றை நாட்டினார். வீட்டின் மஞ்சள் தேவையை தங்கள் சொந்த வீட்டுத் தோட்டத்திலிருந்து பூர்த்தி செய்வதற்காக, ஒரு குடும்பத்திற்கு 05 மஞ்சள் கன்றுகள் வீதம் 15 லட்சம் குடும்பங்களுக்கு கன்றுகள் விநியோகிக்கப்படவுள்ளன.உயர்தர கன்றுகளை ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் உள்ள விவசாய திட்ட அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். அமைச்சர் பந்துல குணவர்தன, ரமேஷ் பதிரன, இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரண, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரோஹன அபேரத்னே ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து…

Read More
Latest | சமீபத்தியது 

கொரோனாவால் மேலும் 11 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 678 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 7 ஆண்களும் 4 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

மே தின வாழ்த்துச் செய்தி….

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும், எமது பாரம்பரிய மரபுரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தும் அதேநேரம், விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம். தற்போதைய கோவிட் 19 நோய்த்தொற்றினால் உலகில் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கமாகும். எமது நாட்டின் உழைக்கும் மக்களும் முகம்கொடுத்திருக்கும் அந்த யதார்த்தத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை…

Read More