கொட்டகலையில் விபத்து – தாய், தந்தை, மகன் படுகாயம்!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நேற்று இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த ஒரே தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு காயமடைந்து சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.