Politics | அரசியல் 

நாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான சிகிச்சை மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த கோவிட் சிகிச்சை நிலையம் நாவலப்பிட்டியில் உள்ள சம்மர்செட் தேயிலை தொழிற்சாலையை புனர் நிர்மாணம் செய்வதன் ஊடாக அமைக்கப்படுகிறது இந்த கோவிட் சிகிச்சை மையத்திற்கு தேவையான படுக்கைகளை தயாரிக்கும் பணியை மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை ஊடாக இன்று தொடங்கியது.

Read More
Latest | சமீபத்தியது 

வவுனியா மாவட்டம் பயணத்தடையினால் முழுமையாக முடங்கியுள்ளது : அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் அனுமதி

நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுலாகியுள்ள நிலையில் வவுனியா நகரம் முழுமையாக முடங்கி வெறிச் சோடிக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதுடன் வீதிகளில் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். மருந்தகங்கள் , சுகாதார துறையினர், ஆடைத் தொழிச்சாலையினர், விவசாயிகள் தமது தேவை நிமிர்ந்தம் சென்று வருவதுடன் பொது மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
Politics | அரசியல் World | உலகம் 

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. ஜெருசலேம்,இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே…

Read More
Latest | சமீபத்தியது 

இன்றிலிருந்து கடைகளை திறக்க அனுமதியில்லை அடையாள அட்டை முறைமையும் செல்லுபடியாகாது

முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , மருந்தகங்கள்தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும்திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸ்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹணதெரிவித்தார். அத்தோடு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை இந்ததினங்களுக்கு , அதாவது இன்றிலிருந்து எதிர்வரும் 17 ஆம் திகதிதிங்கட்கிழமை காலை 4 மணிவரையில் செல்லுபடியாகாதுஎன்றும் அவர் குறிப்பிட்டார். முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடுநடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் செயற்படும் விதம்தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்பட்டது.எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும்வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் ,எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் முழு நேரபோக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇன்று வெள்ளிக்கிழமை , நாளை சனிக்கிழமை மற்றும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ரமழான் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்து செய்தி

ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாத்தின் புனித நூலான அல்-குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ள வகையில் அனுட்டிக்கப்படும் ஒரு மாத கால ரமழான் நோன்பின் மூலம், மத ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உலகிற்கு மிக முக்கியமான செய்தி வெளிப்படுத்தப்படுகிறது. நோன்பு காலத்தில் பிறரது பசி பற்றிய சரியான புரிந்துணர்வுடன், விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப இஸ்லாமியர்கள் எவ்வித உயர்வு தாழ்வுமின்றி ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். மத ரீதியான முறையான போதனைகளை கற்ற ஒழுக்கம் மிகுந்த இஸ்லாமியர்கள் வரலாறு முழுவதும் இலங்கை சமூகத்தில் பிற இனங்கள் மற்றும் மதங்களுடன் ஒருவருக்கொருவர் மிகுந்த நட்புடன் செயற்பட்டுள்ளனர். இந்த நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் முன்னோக்கி…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களது ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் வாழ்த்து……

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து இறைவன் அல்லாஹ் தங்களின் விருப்பங்களை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் ஈதுல்-பித்ர் நோன்புப் பெருநாள் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். இந்த ஈதுல் பித்ர் நன்னாளில் அவர்களின் அந்த அனைத்து நல்லெண்ணங்களும் ஈடேற வேண்டும் என நான் வாழ்த்துகிறேன். எந்தவிதமான அந்தஸ்த்து வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றாக ரமழான் மாதத்தில் ஒரு வளமான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்வது ஒரு சமய மரபு என்ற போதிலும், அதன் சமூக பெறுமானம் போற்றத்தக்கதாகும். தமது வாழ்க்கையை பரிசுத்தப்படுத்திக்கொள்வதற்கும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதற்குமான ஒரு சிறந்த சந்தர்ப்பமாக முஸ்லிம்கள் ரமழானை கருதுகின்றனர். ரமழான் காலத்தில் வளர்ந்தவர்கள் செய்யும் நற்செயல்களின் பால் சிறுவர்களும் ஈர்க்கப்படுகிறார்கள். இன்று உலகம் எதிர்கொள்ளும் கோவிட் பேரழிவிலிருந்து உலக மக்களை பாதுகாக்க வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருக்கும் என்பதில்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

இலங்கை விமானப்படை தயாரித்த “வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு” உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு …

சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED HUMIDIFIED OXYGEN THERAPY) நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கோவிட் 19 தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவரான வித்யாஜோதி, கலாநிதி பந்துல விஜே அவர்களின் எண்ணக்கருவில் பேராசிரியர் ரனில் டி சில்வா மற்றும் வைத்தியர் திலங்க ரத்னபால உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிபுணர்கள் குழுவின் பங்களிப்புடன் இந்த உபகரணத் தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளுக்கு அதிக அளவு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலை ஒட்சிசனை முழு ஈரப்பதத்தில் வழங்குகிறது. விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவின் வழிகாட்டுதலின் பேரில், விமானப்படை கட்டளை அதிகாரி குரூப்…

Read More
Latest | சமீபத்தியது 

ஒருவருக்கு இருவகையான கொவிட் – 19 தடுப்பூசிகளை செலுத்த முடியாது!

ஒருவருக்கு இரண்டு வகையான கொவிட் – 19 தடுப்பூசியை செலுத்த முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இன்னும் விஞ்ஞானப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை -என்று ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நேற்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன்போது, ” முதல் கட்டமாக ஒரு வகையான கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டால் இரண்டாம் கட்டமாக மற்றுமொரு வகை தடுப்பூசியையும் ஏற்றலாம் என துறைசார் நிபுணர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் இலங்கை வைத்தியர்கள் இறுதி முடிவெடுப்பார்கள். எனவே, முதல் சுற்றில் தடுப்பூசியை பெற்றவர்கள், இரண்டாம் சுற்றில் தடுப்பூசியை பெறுவது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். இது…

Read More
Latest | சமீபத்தியது 

கம்பளை, நானுஓயா வாசிகள் உட்பட கொரோனாவால் மேலும் 24 பேர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 892 ஆக அதிகரித்துள்ளது.

Read More