நாவலப்பிட்டியில் 400 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றுநோயை சமாளிக்க நாவலப்பிட்டி பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 படுக்கைகள் கொண்ட முழுமையான சிகிச்சை மையம் கட்டும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. இந்த கோவிட் சிகிச்சை நிலையம் நாவலப்பிட்டியில் உள்ள சம்மர்செட் தேயிலை தொழிற்சாலையை புனர் நிர்மாணம் செய்வதன் ஊடாக அமைக்கப்படுகிறது
இந்த கோவிட் சிகிச்சை மையத்திற்கு தேவையான படுக்கைகளை தயாரிக்கும் பணியை மஹிந்தானந்த அலுத்கமகே அறக்கட்டளை ஊடாக இன்று தொடங்கியது.