Uncategorized 

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிஃபுல் இஸ்லாம் , சாபாநயகர் மஹிந்த யாப்பா அபேர்தனவை இன்று (17) மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.

இரு நாடுகளிலும் காணப்படும் கொவிட் தொற்றுநோய் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. எப்பொழுதும் இலங்கையின் நட்பு நாடாக விளங்கும் பங்களாதேஷ் தொடர்ச்சியாக வழங்கிவரும் ஒத்துழைப்புக்கு சபாநாயகர் தனது பாராட்டைத் தெரிவித்தார். இலங்கையின் கைத்தறி தொழில்துறையின் அபிவிருத்தி மற்றும் நுண்நிதி கடன் விவகாரங்கள் போன்ற விடயங்களில் வழிகாட்டல்களை வழங்க பங்களாதேஷ் தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டார். பல துறைகளில் குறிப்பாக ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் பல்வேறு இலங்கையர்கள் உயர் பதவிகளை வகிப்பதன் ஊடாக பங்களாதேஷின் பொருளாதாரத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கும் உயர்ஸ்தானிகர் பாராட்டைத் தெரிவித்தார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை-பங்களாதேஷ் நட்புறவு சங்கத்தை அமைப்பது கொவிட் சூழல் காரணமாக காலதாமதமாவதாகவும், இதன் பின்னர் இரு நாட்டு உறவுகள் பலப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

Read More
Latest | சமீபத்தியது 

கொழும்பில் இன்று 8 இடங்களில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை…

கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று கொழும்பில் 8 மத்திய நிலையங்களில் தொடரும் என்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி மாளிகாவத்தை பி.டி சிறிசேன மைதானம், மட்டக்குளி விஸ்ட்வைக் மைதானம், கொழும்பு 6 ரொக்ஸி கார்டன், நாரஹேன்பிட்டி முகலன் வீதி,கெத்தாராம விகாரை, கொழும்பு வார்ட் பிளேஸில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, வெள்ளவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம், எகொட உயன ஜெயகத்புற மைதானம் ஆகிய இடங்களில் இந்த தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கை இன்று இடம்பெறும்.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

இந்து பண்பாட்டு நிதியத்திற்கு கௌரவ பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு!

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார். இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.…

Read More
Latest | சமீபத்தியது 

Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா?

எதிர்காலத்தில் தாய்மையை எதிர்பார்க்கும் ஒருவருக்கு தடுப்பூசிப் பெற்றுக்கொள்வது பிரச்சினைகளை ஏற்படுத்துமா? தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்றதா? ஏன் இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை? Sinopharm ஒரு வெற்றிகரமான தடுப்பூசியா? — Sinopharm தடுப்பூசி பற்றிய சில பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் — Sinopharm தடுப்பூசியினால் கோவிட் நோய் ஏற்பட முடியுமா? Sinopharm தடுப்பூசியில் முற்றிலும் செயலிழக்கம் செய்யப்பட்ட வைரஸே காணப்படுகின்றது. இதனால், அது எந்த வகையிலும் உடலில் செயல்படவோ, பெருக்கமடையவோ முடியாது. எனவே, நோயை உண்டாக்கல் சாத்தியமில்லை. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஏன் Sinopharm தடுப்பூசி வழங்கப்படவில்லை? இதற்கான காரணம், கர்ப்பிணி தாய்மார்களிடையே இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சி தகவல்கள் இதுவரை போதுமான அளவில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தடுப்பூசியின் தன்மை மற்றும் கூறுகளை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசியின்…

Read More