Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

உலக சந்தையில் எரிபொருள் விலையின் வேகமான உயர்வு குறித்து அமைச்சரவை துணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது!

2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உலக சந்தையில் எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இன்று (20) பாராளுமன்ற குழு அறை 08 இல் ஒன்றுகூடிய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. மண்ணெண்ணெய் மானியத்தை பூர்த்தி செய்தல், கச்சா எண்ணெய்க்கான துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி (பிஏஎல்) திருத்தம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரச்சினைகள் குறித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் மூன்றாவது விவாதம் இதுவாகும். உலக சந்தையில் எரிபொருள் விலை 2019-2020 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021 இல் இதுவரை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கவனத்தில் கொண்டு தறபோதைய சூழ்நிலைக்கு மத்தியில் மக்கள் நிவாரணத்தைப் பேணுவது குறித்து அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மின்சார சபை உள்ளிட்ட பல அரச…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

“ஆசியாவின் எதிர்காலம்” – குறித்த 26வது சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை

“கோவிட்நோய்த்தொற்றுக்குப் பிந்திய யுகத்தை வடிவமைத்தல்: உலகளாவிய மீட்பில் ஆசியாவின் பங்கு” குறித்த இந்த மதிப்புமிக்க சர்வதேச மாநாட்டில் இன்று உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாநாட்டிற்காக டோக்கியோ நகரில் நேரில் ஒன்றுகூடுவதை தற்போதைய சூழ்நிலைகள் தடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆயினும்கூட, இந்த கலப்பு முறையில் இந்த மாநாட்டைத் தொடர முடிவெடுத்ததற்காக எமது உபசரிப்பாளர் நிக்கேயை (Nikkei) நான் பாராட்டுகிறேன். பிரதமர் யோஷிஹிடே சுகா அவர்களுக்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் நான் இச்சந்தர்ப்பத்தில் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையும் ஜப்பானும் பல தசாப்தங்களாக நீண்ட மற்றும் பயனுள்ள கூட்டாண்மையை அனுபவித்து வருகின்றன. வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை மிகவும் ஆர்வமாக உள்ளது. ஆசியாவில் உள்ள நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதும், உலகளவில் நாடுகளிடையே…

Read More

கௌரவ பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் !

ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பாராளுமன்ற குழு அறை 02 இல் இன்று (18) இடம்பெற்றது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பான உச்சநீதிமன்ற பரிந்துரை கௌரவ சபாநாயகரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டப்பட்டது. அதன்போது கௌரவ அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேடமாக தெளிவூட்டப்பட்டது. அதனை தொடர்ந்து துறைமுக நகரத்துடன் தொடர்புடைய பொருளாதார நன்மைகள் மற்றும் மதிப்புகள் குறித்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது. குறித்த கூட்டத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Read More