Latest | சமீபத்தியது 

நுவரெலியா – டயகமயில் உள்ள தேசிய கால்நடை பண்ணையும், சந்திரிகாம தோட்ட பகுதியும் இன்று 06.05.2021 காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி டயகம தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும், சந்திரிகாம தோட்டப்பகுதியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட் பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இப்பகுதியில் 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, இன்னும் சிலருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

கொள்வனவு செய்த அத்தியாவசியப் பொருட்களை தள்ளுவண்டி ( wheelbarrow) எடுத்துச்சென்ற நபர், அளுத்கம பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக்கசவம் அணியாமல், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்கம, தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது 

அத்துருகிரிய முதல் களனிய நெடுஞ்சாலை – சீனா நிறுவனத்துடன் ஒப்பந்தம்…

அத்துருகிரிய முதல் களனிய வரையிலான நெடுஞ்சாலையை அமைப்பதற்கான சீனா நிறுவனம் ஒன்றுடனான கட்டுமான ஒப்பந்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சீன துறைமுக கட்டுமான நிறுவனத்துடன் (China Harbour Construction Company) குறித்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.ல்

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அனுமதி…

14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 1 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு கௌரவ பிரதமர் உத்தரவு!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதற்கமைய 26 மற்றும் 27 தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் ஊடாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாது என்றும் கௌரவ பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக…

Read More
Latest | சமீபத்தியது 

பசுமை சமூக பொருளாதாரத்திற்கான வீதி வரைவு திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை சமூக பொருளாதாரம் ஒன்றுக்காக திட்டமிடப்பட்ட வீதி வரைவு திட்டம் அமைச்சர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. காலநிலை மாற்றங்களுக்கு பேண்தகு தீர்வுகளைக்கொண்ட பசுமை இலங்கையை உருவாக்குவதற்கான ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகளுடன் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இத்திட்டங்கள் கையளிக்கப்பட்டது. உரப்பாவனை, நிலம், உயிர்ப்பல்வகைமை, கழிவு முகாமைத்துவம், வளிமண்டலம், கைத்தொழில், மீள்ப்பிறப்பாக்க சக்திவலு, நகர் மற்றும் சுற்றாடல் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அடைந்துகொள்ள வேண்டிய இலக்குகளுடன் திட்டங்களை வரைவதற்கு ஜனாதிபதி அவர்களினால் குறித்த அமைச்சர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அமைச்சுக்களின் மூலம் விரிவான ஆய்வுகளின் பின்னர் எதிர்கால செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கிய சுற்றாடல் வலயங்களை இனங்காண்பதுடன், காடுகளை அதிகரிப்பது மற்றும் வன ஒதுக்கீடுகளில் வனப் பகுதியை அதிகரிப்பதற்காக இனங்காணப்பட்ட நிலங்களில் மரங்கள் நடுவதனை துரிதப்படுத்துவது…

Read More
Uncategorized 

சமர்செட் தோட்டத்தில் தீ விபத்து – 08 வீடுகள் தீக்கிரை! 37 பேர் நிர்க்கதி!!

நானுஓயா சமர்செட் தோட்டப்பகுதியில் 10 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து தீக்கிரையாகின. இதில் 4 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளன.

Read More