Latest | சமீபத்தியது 

எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் கற்பாறை சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் மலல்பொல பிரதேசத்தில் பாரிய கற்பாறையொன்று இன்று சரிந்து விழுந்தது. இதனால் சிலமணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாதையில் விழுந்த கற்கல் உடைக்கப்பட்டு போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட பாதையில் பயணிப்போர் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

ஸ்டொக்கம் தோட்டத்தில் லயன் சுவர் இடிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதம் – 12 பேர் பாதிப்பு!

அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13 ஆம் இலக்க நெடுங்குடியிருப்புமீது சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. R

Read More
Uncategorized 

இராணிவத்தை தோட்டத்தில் முறிந்து விழுந்தது பாரிய மரம் – தாயும், மகளும் காயம்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய இராணிவத்தை தோட்டத்தில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு சேதமடைந்துள்ளது. அத்துடன், வீட்டிக்குள் இருந்த தாயும் (வயது 38) , மகளும் (வயது 06) காயமடைந்துள்ளனர். இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இப்பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக வீட்டிற்கு பின்புறத்தில் இருந்த மிகவும் பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீட்டின் சமையலறை பகுதியில் விழுந்துள்ளது. அவ்வேளையில் சமையலறையில் இருந்த 38 வயதுடைய தாயும், 6 வயதுடைய மகளும் காயமடைந்ததாகவும் அதனை தொடர்ந்து அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Read More
Latest | சமீபத்தியது 

கொழும்பு , கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடிக்கத்தடை!

கடலுணவுகளை உட்கொள்வதற்கு மக்கள் தயங்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கப்பல் விபத்துக்குள்ளான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகதிற்கு இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிவந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தின் காரணமாக உயிரினங்களுக்கு கேடு ஏற்படுத்தக்கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் கடலில் கலந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகின்றது. இதன்காரணமாகக் கடலுணவுகளை உண்பது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச நிலையை நீக்கும் வகையில் கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இதுவரையில், குறித்த சம்பவத்தினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறெனினும், கப்பலில் விபத்து ஏற்பட்ட நேரத்தில் இருந்து சம்மந்தப்பட்ட கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படடுள்ளது. அதேவேளை,…

Read More
Latest | சமீபத்தியது 

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்பு…

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். ஆரோக்கியமான உற்பத்தித்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு மாற்றுவது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும். எதிர்கால தலைமுறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். இதற்காக சேதன பசளை உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பசளைகளின் அளவு குறித்து திருப்தியடையாத பட்சத்தில்…

Read More