எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் கற்பாறை சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்
அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால், எட்டியாந்தோட்டை சீபொத் பிரதான வீதியில் மலல்பொல பிரதேசத்தில் பாரிய கற்பாறையொன்று இன்று சரிந்து விழுந்தது. இதனால் சிலமணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாதையில் விழுந்த கற்கல் உடைக்கப்பட்டு
போக்குவரத்து வழமைக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட பாதையில் பயணிப்போர் அவதானத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.