Sport | விளையாட்டு 

பதிலடி கொடுக்குமா இலங்கை? முதலாவது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்து அணியிடம் ஏற்கனவே மூன்று ரி- 20 போட்டிகளிலும் படு தோல்வியடைந்த இலங்கை அணி, ஒரு நாள் போட்டித் தொடரிலாவது பதிலடி கொடுக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது 

இராணுவத்தினரால் 100 நோயாளிகளை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையம் பெலியத்தவில் ஸ்தாபிப்பு…

பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட் – 19 நோயாளர்களை பராமரிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக இராணுவத்தினரால் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. குறித்த பகுதியில் கொவிட் – 19 நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் குறித்த இடைநிலை பராமரிப்பு நிலையம் இராணுவத்தினரால் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இந்த இடைநிலை பராமரிப்பு நிலையம் கொவிட் – 19 தொற்றுக்குள்ளான 100 நோயாளர்களை பராமரிப்பதற்கான சகல மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக 12வது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவின் வழிகாட்டுதலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிர்மாண பணிகளில் 23 ஆவது கஜபா படைப்பிரிவு, மூன்றாவது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் 17வது பொறியியலாளர் சேவைகள் படையணி ஆகியவற்றின் படைவீரர்கள் ஈடுபட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் தென்மாகாண…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

நான்கு மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடை சுவிஸ் தூதுவரினால் கௌரவ பிரதமரிடம் வழங்கிவைப்பு

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர் அவர்கள் இன்று (28) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கிவைத்தார். கொவிட் சவாலை வெற்றிக்கொள்வதற்கு இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இக்னேஷியோ கெசிஸ் அவர்கள், அனைவரும் ஒன்றாக ஒன்றிணைவதன் மூலம் மாத்திரமே எமக்கு இத்தொற்றை முற்றாக ஒழிக்க முடியும். சர்வதேச ஒத்துழைப்பு அதற்கு அத்தியவசியம் என தெரிவித்தார். இந்நன்கொடை தொடர்பில் சுவிட்சர்லாந்து மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கௌரவ பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையே காணப்படும் வலுவான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒக்சிஜன் செறிவு கருவி மற்றும் மரபணு சோதனை அமைப்பு…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் – அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது, கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.  தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அரசு அதீத அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மரண தண்டனை கைதி துமிந்த சில்வாவை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை மூடிமறைப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரை ஜனாதிபதி விடுதலை செய்தார் என்று எதிரணியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அரசு அடியோடு நிராகரிக்கின்றது. புதிய அரசு பதவியேற்ற நாள் தொடக்கம் துமிந்த சில்வாவைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட மக்கள், ஆளும் கட்சியினர் மட்டுமல்ல…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

யாழில் வைத்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நாமல்

காணாமல்போனோர் தொடர்பான விடயத்தை ஊடகங்களில் கருத்து தெரிவித்து, அரசியலாக்கக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று பல ஆண்டுகள் ஆகின்றன. அதேபோன்று, 1988, 89 மற்றும் 83 முதலான காலப்பகுதிகளில் காணாமல்போனோர்கள் குறித்து, தெற்கிலும் தொடர்ந்து பேசப்படுகிறது. இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான விடயம் இதுவாகும். எனவே, இது குறித்து ஊடகங்கள் மூலமாக கருத்து தெரிவித்து, இதனை அரசியலாக்காமல் இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அரச தரப்பும் இணைந்து கிரமமான தீர்வை இதற்கு காண வேண்டும் என்றார். இதேவேளை, தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, தமிழ் அரசியல் கைதியான…

Read More
Latest | சமீபத்தியது 

உங்கள் குழந்தையை பல உறுப்பு அழற்சி நிலையில் (Multisystem Infalmmatory Syndrome in Children – MIS-C) இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது எவ்வாறு?

பல உறுப்பு அழற்சி நிலை (MIS-C)என்பது கொவிட்- 19 நோய்த் தொற்றுடன் தொடர்புடையதாக ஏற்படும் ஒரு தீவிர நோயாக கருதப்படுகின்றது. இதற்கான வலிமையான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும், மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் பல உறுப்பு அழற்சி நிலையால் (MIS-C) பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகள் கொவிட்- 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொவிட்- 19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக நிருபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளில் கொவிட்- 19 நோய்த் தொற்று தீவிரம் குறைந்ததாக காணப்பட்டாலும், பல உறுப்பு அழற்சி நிலை (MIS-C) ஆனது அரிதாகக் காணப்படும், ஆனால், அதி தீவிர சிக்கல் நிலைமைகளை உருவாக்கும். இந்த நோய் நிலைமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், தோல் மற்றும் சமிபாட்டுத் தொகுதி போன்ற பல உறுப்புக்கள் அழற்சிக்கு உள்ளாகின்றன. 2020 ம் ஆண்டு…

Read More

எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எவ்வாறாயினும் அரசாங்க தரப்பிடம் இருந்து இதுதொடர்பான எந்தவிதமான அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாவட்ட காரியாலயம் ஒன்றை இரத்தினபுரி நகரில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசாங்கத்திற்கும் மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கும் அ னுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் இக்காரியாலயத்தை அமைப்பதன் மூலம் கடவுச்சீட்டுக்களை பெற்று கொள்வதற்கு வசதியான இருக்கும். இம்மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குச் செல்வதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அதிக செலவு, சிரமம், கால தாமதம் என்பவற்றை தவிர்த்துக்ெகாள்ளலாம். கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை நடைபெறவில்லை என இரத்தினபுரி மாவட்டத்தின் அரசியல் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி இக்காரியாலயத்தை இப்பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச பொசன் விழா…

➢ மிஹிந்தலை புண்ணிய பூமி ஜனாதிபதியினால் ஒளியேற்றப்பட்டது… அரச பொசன் விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் இன்று (24) இடம்பெற்றது. இவ்வருட பொசன் நோன்மதித் தினத்துடன், மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைத் தந்து 2329 வருடங்கள் நிறைவடைகின்றன. “உலகவாழ் அனைத்து மக்களுக்கும் நலம் கிட்டும்” என்பதே இவ்வருட அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும். மிஹிந்தலை புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு, 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறும் பொசன் வாரத்தில், ரத்னசூத்திர உரை, சமய உரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

அண்மைக்காலம் முதல் இந்தியாவில் பரவி வரும் கொவிட் – 19 வைரஸின் விகாரமைடந்த வடிவமான டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் காணப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்புதிய டெல்ற்றா வைரஸானது முதலில் தோன்றிய கொவிட் – 19ஜ விட துரிதமாக பரவுகின்றமை பொது மக்களிடையே பீதியை அதிகப்படுத்தியுள்ளது. எனவே இந் நிலைமை மோசமடைவதை தவிர்க்க வேண்டுமாயின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிப்பது மிக அவசியமாகும். அதிக சன நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்த்தல் காற்றோட்டமற்ற விதத்தில் ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்தல் நபர்கள் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயமுள்ள இடங்களில், அவ்வாபத்து அதிகம் இருப்பதால் அவ்விடங்களைத் தவிர்த்தல். தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்படி இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் கீழ் காணும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்: சரியான விதத்தில் முகக்கவசத்தை அணிந்து கொள்ளல் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் நபர்களுக்கிடையே குறைந்த பட்சம் இரண்டு மீற்றர் தூர இடைவெளியைப் பேணல் உங்களுக்கு காய்ச்சல் அல்லது தடிமல் இருப்பின்…

Read More