Latest | சமீபத்தியது 

எச்சரிக்கை ! மீன்களை உண்பதால் புற்றுநோய் ஏற்படலாம் – இது தான் காரணம் !

‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பலின் விபத்தினால் கடலில் கலக்கப்பட்டுள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றை உணவாக்கிக்கொள்ளும் கடல்வாழ் உயிரினங்களை நாம் உட்கொள்ளும் வேளையில் அவை நீண்டகால அல்லது குறுகியகாலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக உயிரியல் மற்றும் கடல்சார் தொழிநுட்ப பேராசிரியர் ருசிரா குமாரதுங்க தெரிவித்தார். இலங்கை கடல் பரவில் மூழ்கிக்கொண்டுள்ள எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து வெளியாகியுள்ள இரசாயன பதார்த்தங்கள், பிளாஸ்டிக் துண்டுகள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கடல் உயிரினங்கள் எதிர்கொள்ளவுள்ள விளைவுகள் குறித்து தெளிவுப்படுத்துகையில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், கடல் உயிரினங்களை பொறுத்தவரையில் இந்த காலத்திலேயே இனப்பெருக்கம் செய்யும். மீனினங்கள் மற்றும் ஏனைய கடல் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய கரையை நோக்கி வேகமாக வரும் காலகட்டமாகும். அவ்வாறானதொரு நிலையில் துரதிஷ்டவசமாக எமது கடல்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ரஷ்ய தூதுவர் பாதுகாப்புச் செயலாளர் உடன் சந்திப்பு…

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் அதிமேதகு யூரி மடேரி பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஓய்வு) நேற்று (ஜூன், 02) சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ரஷ்ய தூதுவர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டன. தற்போதைய தொற்றுநோய் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ளும் பொதுவான சிரமங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பாதுகாப்புச் செயலாளர், அந்தப் பிரச்சினைகளை வெற்றிகொள்ள சாத்தியமான தீர்வுகளைக் காண்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட்-19 சூழ்நிலைகளின் போது ரஷ்யாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பாளர் பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார, இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ்…

Read More
Latest | சமீபத்தியது 

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா நிதி….

ஒவ்வொரு முன்பள்ளிப் பாடசாலை அபிவிருத்திக்கும் 6 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை பாரிய வெற்றியாகும் என்று இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். முன்பள்ளிப் பாசடாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக முன்பள்ளி பாடசாலைகளில் உரிய வசதிகள் கொண்ட வகுப்பறைகள் நிர்மாணிக்கப்படுகின்றன. இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவும் முதலாவது கட்டத்தின் வழங்கப்படுகின்றமை மற்றுமொரு வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்பள்ளிப் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கென விசேட தேசிய கொள்கையொன்றும் வகுக்கப்படுகின்றது.

Read More
Latest | சமீபத்தியது 

‘சைனோபாம்’ தடுப்பூசி: இரண்டாவது ‘டோஸ்’ வழங்கும் பணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை…

‘சைனோபாம்’ தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது ‘டோஸ்’ வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 145 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாட்டில் தடுப்பூசியேற்றும் நடவடிக்கைகள் ஜனவரி 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More