Latest | சமீபத்தியது 

கொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடை…

மூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும் முகமாக உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை சுகாதார அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (08) அன்று சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டதுடன், CHEC Port City Colombo நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஜியாங் கௌலியாங் அவர்கள் இதனை கையளித்து வைத்துள்ளார். நாடெங்கிலும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுபோன்ற உபகரணங்களுக்கான அதிக தேவை காணப்படுவதன் காரணமாக இது ஒரு தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று அமைச்சர் அவர்கள் இந்த நன்கொடை முயற்சியை மிகவும் பாராட்டினார். கொழும்பு துறைமுக நகரமானது…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

தென் சூடானில் உள்ள இலங்கை இராணுவ மருத்துவ குழுக்களால் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை…

தென் சூடானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை போர் நகரத்திலிருந்து ஜூபா மற்றும் என்டெப்பே நகர்களுக்கு அனுப்பும் பணிகளில் இலங்கை இராணுவத்தின் மருத்துவ குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். தென் சூடான் போர் நகரில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை வைத்தியசாலையில் இரண்டு எயார் மெடிக்கல் அணிகள், ஒரு மருத்துவ அணி என்பன மருத்துவ பணிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, அவசர பிரிவு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளைக் கொண்ட ஒரு சத்திர சிகிச்சை கூடம் என்பன அமைந்துள்ளன. நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வேளையில் அவர்களில் கொவிட் – 19 தொற்றாளர்கள் உள்ள போதிலும் வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகள் என்பன தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவம்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார். அச்செயற்பாட்டில் நிறுவன தலைவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்னும் கௌரவ பிரதமர் சுட்டிக்காட்டினார். ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தலையீடு செய்து துரித வழிகாட்டலை வழங்கவும், செயற்திறனான வகையில் குறித்த சேவையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் தெரிவித்தார். அதற்கு நிறுவனத் தலைவர்களின் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்ட கௌரவ பிரதமர், மக்கள் சேவையை பொறுப்பாகவும்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

எரிபொருட்களின் விலையில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விலைகள் அதிகரிப்பு அமுலாகும் திகதி நிதி மற்றும் வலுசக்தி அமைச்சுகளால் பின்னர் தீர்மானிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Read More
Uncategorized 

‘பயணத்தடைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள்’

பயணத்தடை நீடிக்கப்பட்டாலும் தற்போது முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு வருமாறு,” உணவு மற்றும் அதியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவை ஊடாக மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவருகின்றது. அப்பணி அவ்வாறே தொடரும். நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துச்செல்வதற்கும், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் இதர தொழிற்சாலைகளில் இடம்பெறும் பணிகளை அவ்வாறே முன்னெடுத்துச்செல்வதற்கும் அனுமதி வழங்கப்படும். விவசாய நடவடிக்கையை வழமைபோல் முன்னெடுக்க முடியும். சேதன பசளை உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் உற்பத்தி நடவடிக்கையை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

Read More

நாட்டில் மேலும் 2,232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. 32 ஆயிரத்து 291 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுவருகிறனர்.

Read More