எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையிலேயே எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. எவ்வாறாயினும் அரசாங்க தரப்பிடம் இருந்து இதுதொடர்பான எந்தவிதமான அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாவட்ட காரியாலயம் ஒன்றை இரத்தினபுரி நகரில் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட இரத்தினபுரி மாவட்ட இணைப்புக் குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசாங்கத்திற்கும் மற்றும் குடிவரவு திணைக்களத்திற்கும் அ னுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் இக்காரியாலயத்தை அமைப்பதன் மூலம் கடவுச்சீட்டுக்களை பெற்று கொள்வதற்கு வசதியான இருக்கும். இம்மாவட்டத்தின் தூர பிரதேசங்களிலிருந்து கொழும்புக்குச் செல்வதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் அதிக செலவு, சிரமம், கால தாமதம் என்பவற்றை தவிர்த்துக்ெகாள்ளலாம். கடவுச்சீட்டுக்களை அவசரமாகவும் சிரமமின்றியும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை நடைபெறவில்லை என இரத்தினபுரி மாவட்டத்தின் அரசியல் சமூகப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டி இக்காரியாலயத்தை இப்பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச பொசன் விழா…

➢ மிஹிந்தலை புண்ணிய பூமி ஜனாதிபதியினால் ஒளியேற்றப்பட்டது… அரச பொசன் விழா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பங்கேற்புடன், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிஹிந்தலை புண்ணிய பூமியில் இன்று (24) இடம்பெற்றது. இவ்வருட பொசன் நோன்மதித் தினத்துடன், மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகைத் தந்து 2329 வருடங்கள் நிறைவடைகின்றன. “உலகவாழ் அனைத்து மக்களுக்கும் நலம் கிட்டும்” என்பதே இவ்வருட அரச பொசன் விழாவின் கருப்பொருளாகும். மிஹிந்தலை புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு, 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இடம்பெறும் பொசன் வாரத்தில், ரத்னசூத்திர உரை, சமய உரைகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மிஹிந்தலை புண்ணிய பூமிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

அண்மைக்காலம் முதல் இந்தியாவில் பரவி வரும் கொவிட் – 19 வைரஸின் விகாரமைடந்த வடிவமான டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் காணப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்புதிய டெல்ற்றா வைரஸானது முதலில் தோன்றிய கொவிட் – 19ஜ விட துரிதமாக பரவுகின்றமை பொது மக்களிடையே பீதியை அதிகப்படுத்தியுள்ளது. எனவே இந் நிலைமை மோசமடைவதை தவிர்க்க வேண்டுமாயின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிப்பது மிக அவசியமாகும். அதிக சன நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்த்தல் காற்றோட்டமற்ற விதத்தில் ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்தல் நபர்கள் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயமுள்ள இடங்களில், அவ்வாபத்து அதிகம் இருப்பதால் அவ்விடங்களைத் தவிர்த்தல். தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்படி இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் கீழ் காணும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்: சரியான விதத்தில் முகக்கவசத்தை அணிந்து கொள்ளல் கைகளை சுத்தமாக வைத்திருத்தல் நபர்களுக்கிடையே குறைந்த பட்சம் இரண்டு மீற்றர் தூர இடைவெளியைப் பேணல் உங்களுக்கு காய்ச்சல் அல்லது தடிமல் இருப்பின்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கௌரவ பிரதமர் தங்காலை கால்டன் இல்லத்தில் சில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீட்டிலிருந்தவாறு சமய வழிபாடுகளில் ஈடுபடுமாறு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொசன் பூரணை தினமான இன்று (24) காலை தங்காலை கால்டன் இல்லத்தில் சில் வழிபாட்டில் ஈடுபட்டார்.தங்காலை வனவாசி குடா விகாரையின் வணக்கத்திற்குரிய பொல்வத்தே பேமானந்த தேரரினால் சில் வழிபாடு நடத்தப்பட்டது.பௌத்த சமயத்தின் சிறந்த உள்ளர்த்;தத்தை சரியாக உணர்ந்து, புத்த பொருமானின் தத்துவத்திற்கு ஏற்ப எதிர்கால வாழ்க்கையை திட்டமிடுவதற்கு இந்த காலப்பகுதி மிகவும் முக்கியமாகும் என கௌரவ பிரதமர் பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியிலும் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ஊடக பிரிவு

Read More