எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும் அரசாங்க தரப்பிடம் இருந்து இதுதொடர்பான எந்தவிதமான அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment