நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறைகளை மேம்படுத்தத் தயாராக உள்ளதாக இலங்கை வர்த்தக சங்கம் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…
தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பியதும் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்தத் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம், இலங்கை வர்த்தகச் சங்கம் தெரிவித்துள்ளது. “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தின் ஊடாக மக்கள் முன்வைத்த நிகழ்ச்சித்திட்டங்களை, கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையினைத் தடையாகக் கொள்ளாமல், ஜனாதிபதி அவர்கள் செயற்படுத்தியுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான விரைவான வேலைத்திட்டத்துக்கு பங்களிக்க முடியும் என்று இலங்கை வர்த்தகசா சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை வர்த்தகச் சங்கத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள், இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களுடன் மேற்கொண்ட சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தனர். 1839ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை வர்த்தக சங்கம், தற்போது 560 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்து மாகாணங்களையும் தழுவிய வகையில்…
Read More