Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ள முதல் தெற்காசிய நாடு இலங்கை:

அமெரிக்க தயாரிப்பான 26910 (pfizer) பைசர் கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஒரு தொகுதி இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இவை அரச மருந்தக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிடமிருந்து இந்தத் தடுப்பூசியைப் கொள்வனவு செய்த முதலாவது தெற்காசிய நாடு இலங்கை ஆகும்.

இது ஒரு நன்கொடை அல்ல.

கடந்த 6 மாதங்களாக அரச மருந்தக கூட்டுத்தாபன அதிகாரிகள் – தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு –

எடுத்த கடினமான முயற்சிகளின் பயனாக இந்த தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்ய முடிந்துள்ளது.

உலக வங்கி ஊடாக இதற்கான விலைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக – மொத்தம் 60 இலட்சம் தடுப்பூசிகளுக்கான விலைத் தொகையைத் தமக்கு ஊடாகச் செலுத்த உலக வங்கி இணங்கியுள்ளது.

மத்திய இரத்த வங்கி பணியாளர்கள் – இந்த தடுப்பூசி மருந்துகளைப் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்துவதற்கு ஏற்ற குளிரூட்டி மற்றும் ஏனைய அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மிகக் குறுகிய காலத்திற்குள் மேம்படுத்தினார்கள்.

இந்த மருந்துகளைப் பாதுகாத்து, பராமரித்து, பயன்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகள் – எமது சுகாதாரப் பணிக் குழுவிற்கு pfizer world அணியால் அளிக்கப்பட்டன்.

இந்த தடுப்பூசி மருந்துகளை கொள்வனவு செய்யும் பணியில் அயராது பாடுபடுகின்ற அனைத்து துறையினருக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

இலங்கை மக்களுக்கான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கி கடுமையாக உழைக்கும் அனைவரையும் இட்டு நான் பெருமிதம் கொள்கின்றேன்.

முதல் கட்டமாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த தடுப்பூசி மருந்துகளுக்கு மேலதிகமாக –

அடுத்த வாரம் அளவில் மேலும் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசி மருந்துகளை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக – மேலும் இரண்டு இலட்சம் பைசர் தடுப்பூசிகளையும் இலங்கை கொள்வனவு செய்ய உள்ளது.

இதேவேளை, இவற்றுக்கு மேலதிகமாக – இந்த மாத இறுதிக்குள் 64 ஆயிரம் அஸ்ராசெனகா மற்றும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Related posts

Leave a Comment