கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தின் இயற்கை பசளை உற்பத்தி தொழிற்சாலை…..
கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தின் இயற்கை பசளை உற்பத்தி தொழிற்சாலை நேற்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனினால் திறக்கப்பட்டது.
50 சிறுகைத்தொழில் திட்டத்தின் கீழ் 7.5 மில்லியன் நிதியில் குறித்த கட்டிடம் நிர்மானித்தப்பட்டதுடன், இரண்டு உழவு இயந்திரம் மற்றும் பதனிடல் இயந்திரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.