Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் விவசாய உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலை….

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் விவசாய உற்பத்தி பொருட்களை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலை அமைக்கப்படவுள்ளது.

5.3 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள களஞ்சியசாலைக்கான அடிக்கல்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டினார்.

கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக கொவிட்-19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (14-07-2021) புன்னைநீராவி கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் 50 மெற்றிக் தொன் உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தக் கூடிய வசதியில் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment