Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

பசுமை விவசாயத்திற்கு 14 பேர் கொண்ட குழு ஒன்று நியமிப்பு….

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 14 பேர் கொண்ட குழு ஒன்றை பசுமை விவசாயத்துக்கான நியமித்துள்ளார். அதனுடன் தொடர்புடைய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 14 பேர் அடங்கிய குறித்த ஜனாதிபதி செயலணியின் தலைவராக விஜித் வெலிகல நியமிக்கப்பட்டுள்ளார். செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக லலித் செனவிரத்ன, கசுன் தாரக அமல், மாலிந்த செனவிரத்ன, ரசிக துசித குமார, கலாநிதி பி.கே.ஜி காவந்திஸ்ஸ, சமந்த பெர்னாண்டோ, சமுதித குமாரசிங்க, அஜித் ரண்தூனு, என்.எம் கலீட், ஷம்மி கிரிண்தே, நிர்மலா கரவ்கொட, சமிந்த ஹெட்டிகன்கானம்கே மற்றும் நிஷான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More
Latest | சமீபத்தியது 

75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளது: லசந்த அழகியவண்ண….

நாட்டில் போதுமான அளவு சீனி உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். சீனிக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றதா என நியூஸ்ஃபெஸ்ட் முன்வைத்த கேள்விக்கு பதில் வழங்கிய போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார். நாட்டில் தற்போது 75,000 மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண கூறினார். மாதமொன்றுக்கு 45,000 மெட்ரிக் தொன் சீனி மாத்திரமே நுகர்விற்கு தேவை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, நிர்ணய விலையை விட அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். 130 ரூபாவிற்கும் அதிக விலையில் ஒரு கிலோ சீனி விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பொதி செய்யப்படாத ஒரு கிலோவிற்கான அதிகபட்ச விலை 122 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு சீனி ஒரு கிலோ 125 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணய…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

2 மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி….

இந்தியாவிடமிருந்து இரண்டு மில்லியன் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் கட்ட இரசாயன திரவ உரம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டுடன் இந்தியாவின் குஜராத் மாநில நிறுவனம் ஒன்றிடமிருந்து திரவ பசளை கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன்,சர்வதேச ரீதியில் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சிறந்த பயனை வழங்கக்கூடிய வகையில் நனோ நைட்ரஜன் பசளை காணப்படும் என விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் யூரியா பசளையை விட சிறந்த பயனை திரவ சேதன பசளை வழங்கும் என விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More
Uncategorized 

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது. உலக அஞ்சல் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1000 ரூபாய் பெறுமதியான முத்திரை மற்றும் இலங்கையின் உள்ளூர் பறவைகளை உள்ளடக்கும் வகையிலான முத்திரை தொகுப்பும் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள் அதற்கான முதல் நாள் உறை மற்றும் முத்திரையை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கினார். உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக அஞ்சல் தின நினைவு முத்திரை -2021, கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நமது நாட்டு தபால் சேவை சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருகின்றமையை பிரதிபலிக்கும் வகையில் புலஸ்தி எதிரிவீர அவர்களினால் வடிகமைக்கப்பட்டுள்ளது.…

Read More
Uncategorized 

2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்….

2022 ஆம் ஆண்டுக்கான துப்பாக்கி அனுமதிப் பத்திரங்களைபுதுப்பிப்பதற்கான திகதிகளை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய, துப்பாக்கி அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டுக்கான தங்கள் துப்பாக்கிகளுக்கான அனுமதி பத்திரங்களை 2021ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். துப்பாக்கி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்ட காலக்கெடு (2022, பெப்ரவரி 28) முடிவடைந்த பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது. புதுப்பிக்கப்படாத துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தையுடைய துப்பாக்கியினை தன் வசம் வைத்திருப்பது துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22வது சரத்துக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும்.

Read More
Uncategorized 

இராணுவ அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தரமுயர்வு….

567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு குறித்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Read More
Uncategorized 

பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள போர்ட் சிட்டி…..

இந்த வருடத்திற்குள் கொழும்பு துறைமுக நகரத்தை பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு துறைமுக நகரம் என்பது தற்போதுள்ள கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தின் விஸ்தரிப்பாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு புத்தம் புதிய நகர அபிவிருத்தித் திட்டம் ஆகும். இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மாத்திரமல்லாது உலக பொருளாதாரத்தில் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம், கடலை நிரப்பி செயற்கையாக உருவாக்கப்பட்ட 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாகும்.பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படவுள்ள போர்ட் சிட்டி

Read More
Uncategorized 

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

Read More
Uncategorized 

பாடசாலை செல்லும் முன் கட்டாயமாக மாணவர்களுக்கு வீட்டில் வழங்கவேண்டிய பயிற்சி…

பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்கள் வீட்டினுள் இருக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, அதனை நீக்குவது மற்றும் அணிந்து கொண்டு இருப்பது போன்ற விடயங்களை பழக்கப்படுத்துவதில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கடந்த முறை சில வாரங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பதை பெரிதும் விரும்பவில்லை. எனவே முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெளிவவுபடுத்த வேண்டும் என்றும்…

Read More
Uncategorized 

உலக புகழ்பெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலை கௌரவ பிரதமருக்கு வழங்கிவைப்பு-!

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது. வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் 7, 8ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகும். அவலோகிஸ்வரர் போதிசத்துவரின் கருணை, தயவு ஆகிய குணங்களை சித்தரிக்கும் வகையில் இச்சிலையின் தோற்றம் அமைந்துள்ளது. இடது காலை கீழே வைத்து இடது கையை தரையில் வைத்துக் கொண்டு வலது கையில் விதர்க்க முத்திரையை கொண்டதாக இச்சிலை விளங்குகிறது. இச்சிலையில் காணப்படும் கலை அம்சங்கள் காரணமாக அது உலகப் புகழ் பெற்று விளங்குவதாக பேராசிரியர் கபில ரணசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார். மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனரான கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட சுவரோவியம்,…

Read More