Uncategorized 

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு…

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற கொவிட் 19 தடுப்பு குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

Read More
Uncategorized 

பாடசாலை செல்லும் முன் கட்டாயமாக மாணவர்களுக்கு வீட்டில் வழங்கவேண்டிய பயிற்சி…

பாடசாலை மாணவர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் சுசி பெரேரா தெரிவித்தார். மேலும் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பாக பெற்றோர்களுக்கு தெளிவூட்டும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாணவர்கள் வீட்டினுள் இருக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கு முகக்கவசம் அணிவது, அதனை நீக்குவது மற்றும் அணிந்து கொண்டு இருப்பது போன்ற விடயங்களை பழக்கப்படுத்துவதில் பெற்றோர்கள் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், கொவிட் தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு கடந்த முறை சில வாரங்கள் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பாடசாலைக்கு சமூகமளித்த மாணவர்கள் முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பதை பெரிதும் விரும்பவில்லை. எனவே முகக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாக குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தெளிவவுபடுத்த வேண்டும் என்றும்…

Read More
Uncategorized 

உலக புகழ்பெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலை கௌரவ பிரதமருக்கு வழங்கிவைப்பு-!

வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகப் பிரசித்திபெற்ற அவலோகிஸ்வரர் போதிசத்துவர் மாதிரி சிலையொன்று மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் பேராசிரியர் காமினி ரணசிங்க அவர்களினால் நேற்று (07) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமரிடம் வழங்கப்பட்டது. வெஹரகலவில் கண்டுபிடிக்கப்பட்ட அவலோகிஸ்வரர் போதிசத்துவர் சிலை கிறிஸ்து வருடம் 7, 8ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியதாகும். அவலோகிஸ்வரர் போதிசத்துவரின் கருணை, தயவு ஆகிய குணங்களை சித்தரிக்கும் வகையில் இச்சிலையின் தோற்றம் அமைந்துள்ளது. இடது காலை கீழே வைத்து இடது கையை தரையில் வைத்துக் கொண்டு வலது கையில் விதர்க்க முத்திரையை கொண்டதாக இச்சிலை விளங்குகிறது. இச்சிலையில் காணப்படும் கலை அம்சங்கள் காரணமாக அது உலகப் புகழ் பெற்று விளங்குவதாக பேராசிரியர் கபில ரணசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார். மத்திய கலாசார நிதியத்தின் நிறுவுனரான கலாநிதி ரோலண்ட் சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட சுவரோவியம்,…

Read More
Uncategorized 

கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு சிங்கப்பூர் நன்கொடை….

திரு. ஹென்றி பே மற்றும் சிங்கப்பூர் நலன் விரும்பிகளிடமிருந்து 250 ஒட்சிசன் செறிவூட்டிகள் உள்ளடங்கலான கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை சிங்கப்பூரின் மஹா கருண பௌத்த சங்கத்தின் மத ஆலோசகர் வணக்கத்திற்குரிய கலாநிதி. கே. குணரதன தேரின் அனுசரணையுடன், சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டது. திருமதி. ராகுல் ரூஹீ தகாஹாஷியினால் நன்கொடையளிக்கப்பட்ட 20 ஒட்சிசன் செறிவூட்டிகளும் மேலும் நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரின் இந்த நன்கொடையானது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான சிங்கப்பூரின் கௌரவ தூதுவர் ஜயந்த தர்மதாச வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் நன்கொடைகளைக் கையளித்தார். பின்னர், உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம்…

Read More
Uncategorized 

வெளிநாட்டு அமைச்சில் கொன்சியூலர் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பு…

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர், அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் நிறுவன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தைப் பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன மற்றும் அலங்கார மீன், உள்நாட்டு மீன் மற்றும் இறால் வளர்ப்பு, மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி, பல நாள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரும் இச்சந்திப்பில் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக அமைச்சில் கொன்சியூலர் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் தற்போதைய நிலையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்தில் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் தேசிய திட்டத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக் காட்டியதுடன்,…

Read More
Uncategorized 

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பஸில் ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிவிப்பு

நிலுவையில் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்திற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச (Basil Rajapaksa) இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணையைக் கையில் எடுத்து புதிய மாற்றங்களோடு அதை விரைந்து நிறைவேற்றுவதற்கு ஆராயப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது . இந்த தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர்…

Read More