Uncategorized 

முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் தைக்கா அஹமத் நஸீம் அவர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு-!

தென்னிந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவர் அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் நேற்று (22) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.அவர் காலஞ்சென்ற இந்திய முஸ்லிம் ஆன்மீகத் தலைவரான அஷ் ஷெயிக் கலாநிதி தைக்கா சுஹாய்ப் அலீம் அவர்களின் புதல்வராவார்.மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளக்கூடிய பணிகள் குறித்து இச்சந்திப்பின் போது கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள் கௌரவ பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்கள், இந்நாட்டின் மஹாசங்கத்தினர் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.குறித்த சந்திப்பின் போது கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.கலாநிதி தைக்கா அஹமத் நஸீர் அலீம் அவர்களுடன் வருகைத்தந்திருந்த முஸ்லிம் மதத் தலைவர்களும் கௌரவ பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.பிரதமர்…

Read More
Latest | சமீபத்தியது 

“நந்தி ஒழிக, நீதி வாழ்க”: நாடாளுமன்றில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணியில் பொலிஸாரினால் ஏற்பட்ட இடையூறுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

Molnupiravir கொவிட் மருந்துக்கு அங்கீகாரம்…

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரையை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´Molnupiravir´ என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (15) கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன கூறுகையில்.. “தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” இவ்வாறு வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மர்க் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ´மோல்னுபிரவிர்´ (molnupiravir) என்ற மாத்திரையை பயன்படுத்த நடவடிக்கை…

Read More
உள்நாடு 

பொலிஸ் தலைமையக பணிப்பாளராக லங்கா ரஜனி அமரசேகர நியமிப்பு…

பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ரஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் உள்நாடு 

இலங்கையர்களுக்கு மீண்டும் இந்திய சுற்றுலா விசா!

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு செய்தி: எந்த உண்மையும் இல்லை….

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற வகையில் போதுமான எரிபொருள் நாட்டில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் உள்நாடு 

பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்…

பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்படும் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதற்கட்டத்தை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் விழாவில் அமைச்சர் உரையாற்றினார். இந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையம் கண்டி தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் 12 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுகிறது. இது 600 கட்டில்களைக் கொண்டதாக 195 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.நேற்று (11) நடைபெற்ற இந்த நிகழ்வில் இதுகுறித்து அமைசர் மேலும் தெரிவிக்கையில் ,தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது தொடர்பான யோசனை சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமா அதிபர் நேற்று பதில் அளித்துள்ளார். இதன் பிரகாரம், இரு தடுப்பூசிகளையும் பெறாத ஒருவர் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடை செய்யவதற்கு சட்ட சிக்கல்கள் இல்லையென கூறினார். இந்த விதிமுறையை அமுலாக்க ஸ்மார்ட்-போன்…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

“இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட பயோச்சார் உற்பத்தி” குறித்த இணைய அமர்வு….

இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள CSIR-கனிம மற்றும் மூலப்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் மணீஷ் குமார் அவர்களால் நடத்தப்பட்ட “இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட உர (பயோச்சார்) உற்பத்தி” குறித்த இணைய அமர்வு ஒன்றினை விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை பேரவையுடன் (SLCARP) இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் 09ஆம் திகதி நவம்பர் 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமர்வில் இலங்கையைச்சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 70 பேர் கலந்துகொண்டு உயிரிக் கழிவுப்பொருட்களை பயோச்சாராக மாற்றி இயற்கை விவசாயத்துக்காக பயன்படுத்துவது குறித்த விடயங்களில் அவதானம் செலுத்தியிருந்தனர்.SLCARP தலைவர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க அவர்கள் தனது அறிமுக உரையில், இலங்கை அரசாங்கம் இயற்கை விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் இந்த செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.இதேவேளை, இங்கு உரை நிகழ்த்தியிருந்த…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு…

ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று (11) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என திருத்தப்பட்டுள்ளது.தற்போது அமுலில் உள்ள 55 வயது என்ற ஓய்வூதிய வயதெல்லை 60 வயது வரை நீடிக்கப்பட்டாலும், ஊழியர் ஒருவர் தனது சுய விருப்பின் அடிப்படையில் 55 வயதில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.புதிய சட்டமூலத்திற்கு அமைய, 55 வயதான ஊழியர்கள் 57 வயது வரை பணியாற்ற முடியும்.53 தொடக்கம் 54 வயதிற்கிடைப்பட்டவர்கள் 58 வயது வரையும் 52 வயதுடையவர்கள் 59வயது வரையும் 52 வயதிற்கு குறைந்தவர்கள் மற்றும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்கள் 60 வயது வரையும் பணியாற்ற முடியும்.50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் தாம்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

“போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவத்துவதற்காக மாத்திரம் புதிய பொதுமைப்படுத்தலை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவது கவலையளிக்கிறது…”ஜனாதிபதி தெரிவிப்பு….

“National Innovation Mission – கனவுகளுக்கு உயிரூட்டும் நிகழ்காலம்” எனும் தொனிப்பொருளில் 2021க்கான தேசிய விஞ்ஞான தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம். இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி அவரகள் வலியுறுத்தினார். உலக விஞ்ஞான தினத்தையொட்டி, இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று…

Read More