Latest | சமீபத்தியது 

‘நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா’ – இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான போரை வெற்றிகொள்வதற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் – என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். ” நாட்டில் தற்போது நாளாந்தம் 500 இற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். சில இடங்களில் தொற்று வீதம் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் முகக்கவசம் அணிகின்றனரா, வீடுகளில் ‘பார்ட்டி’ நிகழ்வு இடம்பெறுகின்றதா என்பதை அரசாங்கம் வந்து தேடிக்கொண்டிருக்க முடியாது. எனவே, மக்கள் பொறுப்புடன் செயற்பட்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுமாறும், பயணங்களை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் அறிவுறுத்தியுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது 

கொழும்பு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்

கொழும்பு பல்கலைகழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நவம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Read More
Latest | சமீபத்தியது 

புலமைப்பரிசில், க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

கோவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு கோவிட் – 19 தொற்று நிலைமையால் 6 மாதங்களின் பின் முழுமையாக 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 8ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை – 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி கல்விப்…

Read More
Latest | சமீபத்தியது 

இலங்கையில் செப்டம்பரில் 7.6 வீதமாக அதிகரித்த பண வீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 7.6 சத வீதமாக அதிகரித்துள்ளது. உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்தமையே பண வீக்கம் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த விலை கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதை அடுத்து, பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்தன. அரிசி, பாண், வெதுப்பக உற்பத்திகள், தேங்காய், காய்கறி, மஞ்சள் தூள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அதிகரித்தன. ஒக்டோபர் மாதம் பால் மாவின் விலைகள் அதிகரித்தன. இதனை தவிர சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையானது உணவு அல்லாத ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பண வீக்கமானது 5.7 சத வீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.   

Read More
Entertainment | பொழுதுபோக்கு, Latest | சமீபத்தியது World | உலகம் 

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்

லண்டனில் பிரபல கர் நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார். லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங் களுக்கு மேலாக வாய்ப் பாட்டு, வீணை ஆசிரியை யாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும் அரங்கேற்றியவர். இவர்களில் சிலர் இத்துறைகளில் உன்னத ஆற்றல்பெற்றுத் திகழ்வது குறிப்பிடத்தக்கது. பாரதிய வித்ய பவனின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் சிவசக்தியின் பாட்டு தனியான இடத்தைப் பெற்றது. ‘வாணி பைன் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் சிவசக்தி தனது கணவர் சிவநேசனுடன் நிர்வகித்து வந்தார். யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயரின் மாணவியான சிவசக்தி, வீரமணி ஐயரின் ஆக்கங்கள் அனைத்தையும் பிரசுரிப் பதில் எடுத்த முயற்சி பெரிதானது. வீரமணி ஐயரின் கீர்த்தனைகளை மேடைகளில் பிரபலமடையச் செய்வதிலும் அவர் பெரும் அக்கறை கொண்டி ருந்தார்.…

Read More
Jafna | யாழ்ப்பாணம் Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள் நியமனம் கோரி நேற்று போராட்டம்

நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் நேற்று வடக்கு ஆளுநர் செயலக முன்றிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவைக் கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஏனையோருக்கான நியமனம் இதுவரை வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றிலில் நியமனம் வழங்கப்படாத வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றி வருகின்றோம். மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம். ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக்…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்த விவகாரம் ; இலங்கையில் அமெரிக்க இராணுவ தளம் உருவாகலாம்- திஸ்ஸ விதாரண

இலங்கைக்கு LNG வழங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளமை நீண்டகால சதித்திட்டத்தின் ஆரம் பம் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது நாட்டின் பொருளாதாரத்தை அமெரிக்காவின் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரும் என்றும், MCC ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் போன்றே முழுமையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த உடன்படிக்கையின் மூலம் இங்கு அமெரிக்க இராணுவத் தளத்தை அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலைமை மேலும் அதிகரிக்க இடமளித்தால் இலங் கை எதிர்காலத்தில் இந்த ஆபத்தான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கியமை குறித்தும் இலங்கைக்கு LNG விநியோகம் தொடர்பில் ஊடகங்கள் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More