Entertainment | பொழுதுபோக்கு, Latest | சமீபத்தியது World | உலகம் 

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் லண்டனில் காலமானார்

லண்டனில் பிரபல கர் நாடக இசைக் கலைஞராகத் திகழ்ந்த திருமதி சிவசக்தி சிவநேசன் நேற்று முன்தினம் காலமானார்.

லண்டன் பாரதிய வித்ய பவனில் மூன்று தசாப்தங் களுக்கு மேலாக வாய்ப் பாட்டு, வீணை ஆசிரியை யாகத் திகழ்ந்த இலங்கையரான சிவசக்தி, லண்டனில் அதிகளவு மாணவ மாணவிகளை வாய்ப்பாட்டிலும் வீணையிலும் அரங்கேற்றியவர். இவர்களில் சிலர் இத்துறைகளில் உன்னத ஆற்றல்
பெற்றுத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
பாரதிய வித்ய பவனின் பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் சிவசக்தியின் பாட்டு தனியான இடத்தைப் பெற்றது.
‘வாணி பைன் ஆர்ட்ஸ்’ என்ற நிறுவனத்தையும் சிவசக்தி தனது கணவர் சிவநேசனுடன் நிர்வகித்து வந்தார்.
யாழ்ப்பாணம் என். வீரமணி ஐயரின் மாணவியான சிவசக்தி, வீரமணி ஐயரின் ஆக்கங்கள் அனைத்தையும் பிரசுரிப் பதில் எடுத்த முயற்சி பெரிதானது.
வீரமணி ஐயரின் கீர்த்தனைகளை மேடைகளில் பிரபலமடையச் செய்வதிலும் அவர் பெரும் அக்கறை கொண்டி ருந்தார். பல நற்பணிகளுக்கான நிதி யுதவியிலும் அவர் துணை புரிந்தார்.
யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியிலும் பணியாற்றிய சிவசக்திக்கு வயது 64 ஆகும்.

Related posts

Leave a Comment