Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

காணியில்லாத அனைத்து மக்களுக்கும் காணிகள் பெற்றுக்கொடுக்கப்படும் – வியாழேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்குள் காணியில்லாத அனைத்து மக்களுக்கும் காணிகளைப்பெற்றுக்கொடுப்பதற்கான விரிவான செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S.Viyalendran) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடு 01ஆம் குறுக்கு வீதி தொடக்கம் 10ஆம் குறுக்கு வீதி வரையான பகுதிகளை கொங்கிரிட் இட்டு புனரமைப்பு செய்து இன்று திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) “நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின் படி 100,000 கிலோமீற்றர் வீதிகளை புனரமைப்பு செய்யும் திட்டத்தின் கீழ் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் 21 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மிகமோசமான நிலையிலிருந்த இந்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ரம்பாவ என்ற இடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் அங்கு காவலுக்குச் சென்றுள்ளார். இந்நிலையிலேயே கட்டுத்துவக்கு வெடித்ததாகவும் தெரியவருகின்றது. தற்போது இவரது சடலம் ஹொரவ்பொத்தானைபிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

அருட்தந்தை சிறில் காமினி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்.

அருட் தந்தை வணக்கத்துக்குாிய சிறில் காமினியை தற்போதைய நிலையில் கைது செய்யப்போவதில்லையென குற்றபுலனாய்வுத் துறையினர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஊடாக இந்த தகவல் உயர் நீதிமன்றத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மை கைது செய்யக்கூடாது என்று கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் விசாரணை இன்று இடம்பெற்ற போதே குற்றபுலனாய்வு துறையினர் இந்த அறிவித்தலை வெளியிட்டனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசப்புலனாய்வு துறையின் தலைவர் மீது குற்றம் சுமத்தியதாக கூறப்பட்டு அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக அரசப் புலனாய்வு பிரிவின் தலைவர் குற்றப்புலனாய்வு துறையில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை அடுத்து அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு மனுவை தாக்கல் செய்திருந்தாா்.  இந்தநிலையில்  அருட்தந்தை சிறில் காமினியை கைதுசெய்யக்கூடாது என்றுகோாி, இன்று நீதிமன்ற முன்றலில் ஆா்ப்பாட்டம்…

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

அடுத்த 24 மணித்தியாலங்களில் இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்க மண்டலம்

எதிா்வரும்  24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (BOB) குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் வலுவடைந்து, இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு பகுதியில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத் தாக்கம் காரணமாக கடல் பகுதியில் கடும் மழை மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றா் வரை திடீரென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்பரப்பில் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிக்கு இன்று (08) மாலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கிடையில் சந்திப்பு.…

Read More