Latest | சமீபத்தியது உள்நாடு 

கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ரம்பாவ என்ற இடத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் அங்கு காவலுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையிலேயே கட்டுத்துவக்கு வெடித்ததாகவும் தெரியவருகின்றது.

தற்போது இவரது சடலம் ஹொரவ்பொத்தானைபிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

Leave a Comment