Latest | சமீபத்தியது Medicine Iமருத்துவம் உள்நாடு 

பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்…

பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்படும் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதற்கட்டத்தை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் விழாவில் அமைச்சர் உரையாற்றினார். இந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையம் கண்டி தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் 12 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுகிறது. இது 600 கட்டில்களைக் கொண்டதாக 195 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.நேற்று (11) நடைபெற்ற இந்த நிகழ்வில் இதுகுறித்து அமைசர் மேலும் தெரிவிக்கையில் ,தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது தொடர்பான யோசனை சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமா அதிபர் நேற்று பதில் அளித்துள்ளார். இதன் பிரகாரம், இரு தடுப்பூசிகளையும் பெறாத ஒருவர் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடை செய்யவதற்கு சட்ட சிக்கல்கள் இல்லையென கூறினார். இந்த விதிமுறையை அமுலாக்க ஸ்மார்ட்-போன்…

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் 

“இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட பயோச்சார் உற்பத்தி” குறித்த இணைய அமர்வு….

இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள CSIR-கனிம மற்றும் மூலப்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் மணீஷ் குமார் அவர்களால் நடத்தப்பட்ட “இயற்கை விவசாயத்துக்கான ஊட்டச்சத்துக்கள் செறிவூட்டப்பட்ட உர (பயோச்சார்) உற்பத்தி” குறித்த இணைய அமர்வு ஒன்றினை விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான இலங்கை பேரவையுடன் (SLCARP) இணைந்து இந்திய உயர் ஸ்தானிகராலயம் 09ஆம் திகதி நவம்பர் 2021 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த அமர்வில் இலங்கையைச்சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 70 பேர் கலந்துகொண்டு உயிரிக் கழிவுப்பொருட்களை பயோச்சாராக மாற்றி இயற்கை விவசாயத்துக்காக பயன்படுத்துவது குறித்த விடயங்களில் அவதானம் செலுத்தியிருந்தனர்.SLCARP தலைவர் பேராசிரியர் காமினி சேனாநாயக்க அவர்கள் தனது அறிமுக உரையில், இலங்கை அரசாங்கம் இயற்கை விவசாய நடைமுறைகளை பின்பற்றுவதற்கு தீர்மானித்திருக்கும் நிலையில் இந்த செயலமர்வின் முக்கியத்துவம் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.இதேவேளை, இங்கு உரை நிகழ்த்தியிருந்த…

Read More
Latest | சமீபத்தியது Politics | அரசியல் 

ஓய்வூதிய வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு…

ஓய்வூதியத்திற்கான குறைந்தபட்ச வயதெல்லை தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று (11) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதற்கமைய, குறைந்தபட்ச ஓய்வூதிய வயதெல்லை 60 என திருத்தப்பட்டுள்ளது.தற்போது அமுலில் உள்ள 55 வயது என்ற ஓய்வூதிய வயதெல்லை 60 வயது வரை நீடிக்கப்பட்டாலும், ஊழியர் ஒருவர் தனது சுய விருப்பின் அடிப்படையில் 55 வயதில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.புதிய சட்டமூலத்திற்கு அமைய, 55 வயதான ஊழியர்கள் 57 வயது வரை பணியாற்ற முடியும்.53 தொடக்கம் 54 வயதிற்கிடைப்பட்டவர்கள் 58 வயது வரையும் 52 வயதுடையவர்கள் 59வயது வரையும் 52 வயதிற்கு குறைந்தவர்கள் மற்றும் புதிதாக இணைத்துக்கொள்ளப்படும் ஊழியர்கள் 60 வயது வரையும் பணியாற்ற முடியும்.50 வயது பூர்த்தியடைந்த பெண்களும் 55 வயது பூர்த்தியடைந்த ஆண்களும் தாம்…

Read More