Molnupiravir கொவிட் மருந்துக்கு அங்கீகாரம்…

கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாத்திரையை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்ப குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். கொவிட் தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ´Molnupiravir´ என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (15) கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன கூறுகையில்.. “தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். தொழில்நுட்பக் குழுவிடம் தேவையான ஆவணங்களைப் பெற்று NMRA-விடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.” இவ்வாறு வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மர்க் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ´மோல்னுபிரவிர்´ (molnupiravir) என்ற மாத்திரையை பயன்படுத்த நடவடிக்கை…

Read More
உள்நாடு 

பொலிஸ் தலைமையக பணிப்பாளராக லங்கா ரஜனி அமரசேகர நியமிப்பு…

பொலிஸ் தலைமையக நிர்வாக பிரிவு முதல் பெண் பணிப்பாளராக SSP லங்கா ரஜனி அமரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More
Latest | சமீபத்தியது World | உலகம் உள்நாடு 

இலங்கையர்களுக்கு மீண்டும் இந்திய சுற்றுலா விசா!

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்களுக்கு, சுற்றுலா விசா வழங்கும் பணி நேற்று (15) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. (அரசாங்க தகவல் திணைக்களம்)

Read More
Latest | சமீபத்தியது உள்நாடு 

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு செய்தி: எந்த உண்மையும் இல்லை….

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக பரவி வரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 17 சதவீத பெற்றோலும், 29 சதவீத டீசலும் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றன. கேள்விக்கு ஏற்ற வகையில் போதுமான எரிபொருள் நாட்டில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என தேவையில்லாமல் அஞ்ச வேண்டாமென அமைச்சு பொதுமக்களைக் கேட்டுள்ளது.

Read More