Latest | சமீபத்தியது Politics | அரசியல் உள்நாடு 

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட டி.எம்.எல்.பண்டாரநாயக்க (D.M.L. Bandaranaike) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தின் பின்னர் உத்தியோகபூர்வமாக இன்று(7) தமது கடமைகளை ஆரம்பித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட்ட அதிகாரியான இவர் இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளார்.

இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள, திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

Leave a Comment