Latest | சமீபத்தியது Politics | அரசியல் World | உலகம் 

விவசாய அமைச்சின் செலவினத் தலைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இருந்து விவசாய அமைச்சின் செலவினத் தலைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் மஹிந்தானந்த தலமையில் விவசாய அமைச்சில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் விவசாய அமைச்சுக்கும் அதனுடன் இணைந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான பண்ணைகளை நவீன உபகரணங்களுடன் நவீனப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டது. நாட்டின் ஒவ்வொரு சுற்றுசூழல் மண்டலங்களிலும் மண் பரிசோதனையை மேற்கொள்ளவும், விவசாயிகளின் பயன்பாட்டிற்கு நவீன கருவிகளை வழங்கவும், இரசாயன பயன்பாட்டை குறைக்கவும், தகவல் தொழில்நுட்ப தரவுத்தளத்தை விரைவாக முடிக்கவும், விவசாயத்தை திறம்பட நிர்வகிக்கவும் முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment