ஒமிக்ரோன் இலங்கையில் வேகமாக வியாபிக்குமா?
கோவிட் ஒமிக்ரோன் திரிபு இலங்கையில் வியாபிக்க வாய்ப்பில்லை என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு சக்தி பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபு ஐரோப்பா மற்றும் இலங்கையில் வேகமாக பரவும் சாத்தியங்கள் குறைவு என தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க மருத்துவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது என அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்த வைரஸ் திரிபு கோவிட் தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாவிட்டாலும், பூஸ்டர் தடுப்பூசிகளின் மூலம் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.எவ்வாறெனினும் இந்த வைரஸ் தொற்று திரிபு தொடர்பில் திடமான முடிவுகள் எதனையும் தற்போதைக்கு எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இந்த திரிபு தொடர்பில் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடாத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.