உள்நாடு 

ஏப்ரலில் மக்கள் உண்பதற்கு உணவு இருக்காது:பேராசிரியர் மெத்திகா வித்தானகே

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் மக்கள் உண்பதற்கு உணவு இல்லாத நிலைமை ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடத்தின் பேராசிரியர் மெத்திகா வித்தானகே எச்சரித்துள்ளார்.

பெரும் போக பயிர் செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற போதிலும் அதற்கு தேவையான உரத்தை வழங்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

சேதனப் திரவ பசளையை மாத்திரம் பயன்படுத்துவதால், நாட்டுக்கு போதுமான அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.

பெரும் போகம் என்பது நாட்டுக்கு முக்கியமான அதிகளவில் அறுவடை கிடைக்கும் போகம்.இந்த போகத்தில் பரீட்சித்து பார்க்க முடியாது. கமத்தொழில் துறையின் நிபுணர்கள், ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் காரணமாக உணவு பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் மெத்திகா வித்தானகே குறிப்பிட்டுள்ளார். 

Related posts

Leave a Comment