உள்நாடு 

பாலில் இருந்து தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்குதல்.

பாலில் இருந்து தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்குவதற்கும் திரவப் பாலை பிரபலப்படுத்துவதற்கும் மாகாண சபைகளின் உதவிகளைப் பெறுவதற்காக கால்நடை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு நிதி அமைச்சர் தலைமை தாங்கினார்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் கீழ் இடம்பெற்ற இந்த செயலமர்வில், மாகாண சபைகளினூடாக திரவ பால் கொண்டு நாட்டை தன்னிறைவு செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், விவசாய அமைச்சு 13 பயிர்களின் இறக்குமதியை நிறுத்தி, அந்த பயிர்களில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ததுடன், நாடு முழுவதும் விதைக் கிராமங்கள், பயிர்க் கிராமங்கள் மற்றும் உரக் கிராமங்களை நிறுவி உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் செயல்முறை குறித்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந் செயலமர்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் உட்பட ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய பிரதம செயலாளர்கள், விவசாய அமைச்சின் செயலாளர், அரச செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Leave a Comment