உள்நாடு 

நுவரெலியா பிரதேச பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள்….

சௌபாக்கிய உற்பத்தி கிராமம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சேதனை பசளை உற்பத்தி செயற்திட்டத்தை மேற்கொள்வதற்காக நுவரெலியா பிரதேச பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதுதொடர்பான நிகழ்வு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

நுவரெலியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விவசாய உபகரணங்களை வழங்கினார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் சௌபாக்கியா வாரம் இடம்பெற்று வருகின்றது.

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண்நிதி, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் 8 கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 48 பயனாளிகளுக்கு இவ்வாறு பொருட்கள் வழங்கப்பட்டன.

Related posts

Leave a Comment