சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட்19 தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
12 முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி குறித்த ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இதன்படி, 12 முதல் 15 வயது வரையிலான சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.