கையேந்தும் அவசியம் எமக்கில்லை : உறுதியான நிலைப்பாட்டில் சிறிலங்கா
சர்வதேச நாணய நிதியத்திடம் நீண்ட கால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லையெனவும் அவ்வாறு செல்லும் பட்சத்தில் பாதகமான நிலைமை ஏற்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal )தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் நாடு தற்போது நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிப்பதாகவும், எனினும் உண்மையில் அவ்வாறான எந்தவொரு நெருக்கடி நிலையும் நாட்டில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைதொடர்பில் வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் நீண்டகால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு செல்லும்போது பாதகமான நிலை ஏற்படும். ஒரு நாடாக நாம் பாதகமான நிலைக்கு செல்லக்கூடாது. எதிர்க்கட்சி…
Read More