Politics | அரசியல் 

“தொப்பி பிரட்டிகள்” என்ற அவப்பெயர் எதற்கு? ஹக்கீம் மற்றும் ரிசாட்டிடம் இம்ரான் மஹ்ரூப் கேள்வி

அப்போது கசப்பாக இருந்த மொட்டுக் கட்சியும், ராஜபக்ஸ குடும்பமும் இப்போது இனிப்பதற்கு காரணம் என்ன என்பதை சகல மக்களுக்கும் இவர்கள் தெளிவு படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) அரசாங்கத்திற்கு அதரவு கொடுத்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவர்கள் அங்கொன்றும், இங்கொன்றும் பேசுவதால் தான் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் அவமானங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்கள், தொப்பி பிரட்டிகள் என்றெல்லாம் முஸ்லிம் சமுகம் அவப்பெயரை சம்பாதித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை  கோரியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், 

பல்லின சமூகம் வாழும் இந்நாட்டில் முஸ்லிம் சமுகத்தின் மீது மாற்று மத சகோதரர்கள் தப்பெண்ணம் கொள்ளும் வகையில் செயற்பட்டு சமுகத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையை முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கைவிட வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்துடன் தான் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவிக்கும் காணொளி சமுக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகின்றது.

Related posts

Leave a Comment