இந்நாட்டின் தேசிய வளமான பாஸ்பேட் வைப்புகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்
இந்நாட்டின் தேசிய வளமான பாஸ்பேட் வைப்புகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவகத்தின் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொஸ்பேட் மூலம் உற்பத்தி செய்யக்கூடிய உப பொருட்களுக்கு பெறுமதி சேர்ப்பதன் மூலம் பொட்டாசியம் கரிம உரங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த பொட்டாசியம் வைப்புத்தொகையின் ஊடாக தற்போதைய வருடாந்த உற்பத்தித் திறனை 50,000 மெட்ரிக் டன்களாக அதிகரிப்பதற்கான திட்டமிடல்களையும் அமைச்சர் மஹிந்தனந்த தெரிவித்தார்
இக்கலந்துரையாடலில் விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நில்வல கோட்டேகொட மற்றும் நானோ தொழில்நுட்ப நிறுவக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்