Latest | சமீபத்தியது 

லிட்றோ எரிவாயு நிறுவனத்துக்கு நீதிமன்றின் கடுமையான உத்தரவு

எரிவாயு கொள்கலன்களில் எரிவாயு கலவையை காட்சிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் லிட்றோ நிறுவனத்துக்கு மேன்முறையீடடு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த உத்தரவுக்கு கட்டுப்படுவதற்கு தயாரா? என்பதை இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடையுத்தரவு மனுவை பரிசீலித்த போதே, லிட்றோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை தற்போது சந்தைக்கு வழங்கப்பட்ட எரிவாயு கொள்கலன்களை திரும்பப் பெறுமாறும் Litro மற்றும் Laughfs நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..  

Related posts

Leave a Comment